போலீசார் கோலாலும்பூர், ஜாலான் செமராக்கில் பெல்டா நில உரிமை மாற்றிவிடப்பது தொடர்பில் பெல்டா முன்னாள் தலைவர் இசா சமட்டிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
“அவர் காலை மணி 10.30க்கு பெல்டா விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க வந்தார் என்பதை உறுதிப்படுத்துகிறேன்.
“பல சிறப்பு அதிகாரிகளுடன் வந்தார். இப்போது அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது.
“இன்று வெள்ளிக்கிழமை என்பதால் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்த பிறகும் விசாரணையைத் தொடர்வோம்”, என வணிகக் குற்றத்துறை இயக்குனர் அமர் சிங் இஷார் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இசா நேற்று வாக்குமூலம் அளிப்பார் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இசாவே வாக்குமூலப் பதிவை இன்று தள்ளிவைக்குமாறு கேட்டுக்கொண்டாராம்.
இன்று காலை 9 மணியிலிருந்து 30 செய்தியாளர்கள் போலீஸ் தலைமையக வளாகத்தில் இசா வருகைக்காகக் காத்திருந்தார்கள். ஆனால் , அவர் யார் கண்ணிலும் படாமல் வேறொரு வழியாக புக்கிட் அமானுக்குள் சென்றுவிட்டதாக நம்பப்படுகிறது.
உண்மையான குற்றவாளிகளை தண்டியுங்கள்.