பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் 2017-இல் அமுலாக்கப்பட்ட இருமொழித் திட்டம் குறித்து தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்து பத்திரிக்கை செய்தி வெளியிட்ட இருமொழித் திட்டம் ஆதரவாளர் டத்தின் அசிமா நூர் ரகிம் மீது போலிஸ் புகார் ஒன்று பதிவு செய்யப்பட உள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் தருணத்தில் அது குறித்து அவர் அத்துமீறி பத்திரிக்கை செய்தி விட்டிருப்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமையும் என்ற வகையில் இந்த புகார் அமையும் என்கிறார் இதன் ஏற்பாட்டாளர் ஆர். பாலமுரளி.
29.12.2017 முதல் 2.1.2018 வரை அசிமா அவர்களின் செய்தி ஆங்கில பத்திரிக்கை மற்றும் பிற வலைதளங்களில் பரவலாக வெளியானது. அதில் அவர் பெற்றோர்கள் பள்ளியில் மறியலில் ஈடுபடலாம் என்று கோடிகாட்டியிருந்தார்.
இந்த புகாரை, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பள்ளி வாரியமும் முன்னாள் மாணவர் சங்கமும் செய்ய உள்ளனர்.
இன்று மாலை (5.1.2018) 6.00 மணிக்கு பெட்டலிங் ஜெயா மாவட்ட தலைமை காவல்துறை நிலையத்தில் இந்த புகார் செய்யப்ப்ட உள்ளது.
அதைத் தொடர்ந்து ஒரு பத்திரிக்கை சந்திப்பும் உள்ளது.
தகவல் பெற ஆர். பாலமுரளியுடன் தொடர்பு கொள்ளவும். எண்: 013 632 0587


























கண்டிப்பாக நடவடிககை எடுங்கள்.