ஜேர்மனியின் குடியரசுத் தலைவர் ஏஞ்சலா மெர்க்கெல் தன்னுடைய நாட்டுமக்களின் சந்தேகங்களுக்கும் வினாக்களுக்கும் யூடியூப் மூலமாகப் பதிலளித்துள்ளார்.
மக்கள் கேட்ட 1700 கேள்விகளின் முதற்கட்ட பதிலளிப்பு கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்து முடிந்தது.
வெள்ளிக்கிழமையன்று, பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், ஓய்வூதியம், உடல்நலப் பாதுகாப்பு போன்வற்றிற்கு பதிலளித்தார். முதலில், அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் சட்டப்படியான அமைப்பில் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த மெர்க்கெல் அந்த அமைப்பு செயல்படும் விதத்தை விளக்கினார். ஆனால், ஏன் அரசியல்வாதிகள் அதில் சேர்க்கப்படவில்லை என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.
இரண்டாவதாக, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் தங்களுடைய சம்பளத்தைத் தாமே முடிவு செய்கின்றனர் என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.
இதற்கு மெர்க்கெல், அவர்கள் மிகவும் கவனமாக முடிவெடுத்துத்தான் தங்கள் சம்பத்தை நிர்ணயிக்கின்றனர். நகரத்து மேயர்களுக்கு வழங்கும் சம்பளத்தைப் போலவே அவர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது என்றார்.
இந்தக் கேள்விபதில் நிகழ்ச்சி பற்றி கேட்டதற்குத் தான் ஒரு ஈடுபாட்டுடன் அரசியலுக்கு வந்துள்ளதால் இந்தக் கேள்விகள் தனக்கு மிகுந்த ஆர்வத்தை அளிப்பதாகக் கூறினார். எனவே இந்தக் கேள்விகளுக்கு தான் மிகவும் உண்மையாகப் பதிலளிப்பதாவும், கேட்பவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் பதில் அளிப்பதாகவும் கூறினார்.