சமூக வலைத்தள ஆய்வு நிறுவனமான Politweet.Org 14வது பொதுத் தேர்தலில் பெர்சத்துவும் அமனாவும் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவுதான் என்கிறது.
இரு கட்சிகளும் போட்டியிடும் இடங்கள் அப்படி. பாஸ் போட்டியிட்டு வாக்குகளைச் சிதறடிக்காமல் இருந்தால்கூட அவற்றால் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களையே வெல்ல முடியும்.
அம்னோவுக்கு மாற்றுக்கட்சியாகக் கூறப்படும் பெர்சத்து தீவகற்ப மலேசியாவில் 51 இடங்களில் போட்டியிடும். பாஸிலிருந்து பிரிந்த அமனா 27 இடங்களில்.
பெர்சத்து போட்டியிடும் இடங்களில் 62 விழுக்காட்டு வாக்காளர்கள் பிஎன்னுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று அது கூறிற்று. அமானுக்கு அது போட்டியிடும் இடங்களில் 50 விழுக்காடு ஆதரவு கிடைக்கலாம்.