14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தேடும் வேட்பாளர்களின் நேர்மை தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று அறிவித்தார்.
ஊழல் மற்றும் தவறாக அதிகாரத்தைப் பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொண்டவர்கள் மீது அதிகக் கவனம் செலுத்தப்படுவதாகும் அவர் கூறினார்.
அனைத்து மாநிலங்களும் அவற்றின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற வேட்பாளர்களின் முழு பட்டியலையும் அனுப்பி விட்டன. எனினும், அவர்களை நேர்மை அடிப்படையில் வடிகட்டுவதற்கான முயற்சிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வேட்பாளர்களின் தேர்வுக்கு முதன்மையான அளவுகோல் “நேர்மை'” என்று ஸாகிட் வலியுறுத்தினார்.
ஊழலில் பிடிபட்டவர்கள்…சம்பந்தப்பட்டவர்கள், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியவர்கள் அல்லது சட்டம் அல்லது சமயம் ஆகிய்வற்றுக்கு முரணானப் பண்புடையவர்கள் மீதும் கவனம் செலுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
வாக்களர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம் என்று கோலாலம்பூரில் இன்று இரண்டு நேர்மை-பொருள் கொண்ட நூல்களை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினா.