பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, ஒரு வாரமே ஆன டாக்டர் மகாதீர், பாஸ்-சின் பிரதமர் வேட்பாளர் யார் என்று, இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பெர்சத்து கட்சியின் தலைவருமான அவர், எதிர்வரும் பொதுத் தேர்தலில், பிரதமர் வேட்பாளராக பாஸ் யாரை ஆதரிக்கப்போகிறது, தன்னையா அல்லது அம்னோவின் தலைவர் நஜிப் ரசாக்கையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“எங்களுக்குத் தெரிய வேண்டும், பாஸ் போட்டியிடவுள்ளது, அதன் பிரதமர் வேட்பாளர் யார்? நஜிப்பா? நானா? நாம் தெரிந்து கொள்ள வேண்டும்,” என்று பெட்டாலிங் ஜெயாவில் நடந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறினார்.
அவர்களின் (பாஸ்) பிரதமர் வேட்பாளர் தேர்வு யார் என்று தெரிந்தால், இந்தப் பொதுத் தேர்தலில் அவர்கள் வெல்வார்களா, இல்லையா என்பதை நம்மால் கணிக்க முடியும் என்றும் மகாதீர் தெரிவித்தார்.
அம்னோவிற்கு நஜிப் தலைமையேற்பதை விரும்பாத அம்னோ உறுப்பினர்கள் இருப்பதாகவும் மகாதீர் குற்றம் சாட்டினார்.
“நஜிப்பின் முரட்டுத்தனத்தால் சில அம்னோ-காரர்கள் வெறுப்படைந்துள்ளதாக கேள்விபட்டேன்.
“முரட்டுத்தனமான ஒருவரை எப்படி பிரதமராக நியமிப்பது,” எனக் கேட்டார் அவர்.
பாஸ்-அம்னோ உடனான உறவு பற்றி கருத்துரைக்குமாறு, செய்தியாளர்கள் கேட்டதற்கு, மகாதீர் இவ்வாறு பதிலளித்தார்.
கடந்த ஞாயிறன்று, பெர்சத்து உறுப்பினரான அப்துல் காடிர் ஜாசின், ஒரு வலைப்பதிவு இடுகையில், “அம்னோ-பாஸ் தேர்தல் ஒத்துழைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நஜிப் ‘கிளாந்தானைப் பாஸ்-க்குக் கொடுத்துவிட்டார்’ எனும் தகவல் காற்று வாக்கில் வந்துள்ளது,” என்று குறிப்பிட்டிருந்தார்.
அப்துல் காடிரின் கூற்றுப்படி, நஜிப்பின் இந்த தன்னிச்சையான முடிவு, கிளாந்தான் மாநிலப் பாரிசான் தலைவர் உட்பட, மற்ற அம்னோ தலைவர்களையும் அதிருப்தி அடையவைத்துள்ளது.
வயதான காலத்தில் வேண்டாம் ஐயா துன் மகாதீர் அவர்களே பதவி மோகம், ஒரு நல்ல திறமையான இளம் வயது அனுபவம் மிக்க ஒருவரை தேர்வு செய்து பிரதமர் வேட்பாளர் பதவியை கொடுபது மிக சிறந்தது. மிக சிறந்த தலைவர்கள் இப்போது இருகிறார்கள். அவர்களிடம் பிரதமர் பதவியை கொடுப்பதே சால சிறந்தது.