பெர்மாதாங் பாவ் தொகுதியில் ஒரு வேட்பாளர் களமிறக்கப்படுவார் என
பாஸ் சூளுரைத்துள்ளது.
நேற்றிரவு பினாங்கு, குபாங் செமாங்கில் ஒரு செராமாவில் கலந்துகொண்ட பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், பெர்மாத்தாங் பாவில் பாஸ் போட்டிடுவது ஒன்றும் புதிதல்ல என்றார். 1978 தேர்தலில் பாஸ் அங்கு போட்டியிட்டு வென்றது.
பினாங்கு பாஸ் தலைவர் முகம்மட் பவுசி யூசுப், அவ் வேட்பாளரைக் கட்சி ஏற்கனவே அடையாளம் கண்டுவிட்டதாகக் கூறினார். ஆனால், அவர் யார் என்பதை பவுசி தெரிவிக்கவில்லை.
ஆக, ஒரு விறுவிறுப்பான போட்டிக்கான களமாக பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் கோட்டையான பெர்மாத்தாங் பாவ் திகழப் போகிறது.