பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி அமைத்தால் அரசாங்க உயர் அதிகாரிகளை நியமிப்பதில் எதிர்க்கட்சியினரும் பங்கேற்ப வாய்ப்பளிக்கப்படும்.
இன்று புத்ரா ஜெயாவில் ஹரப்பான் பிரதமர் வேட்பாளர் டாக்டர் மகாதிர் முகம்மட் முன்வைத்த உருமாற்றத் திட்டத்தில் இந்த உறுதிமொழியும் அடங்கியிருந்தது.
நடப்பில் அரசாங்க உயர் பொறுப்புகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படும்போது பிரதமர் ஒரு பெயர்ப் பட்டியலை மாமன்னரிடம் சமர்பிப்பார். அதிகாரிகள் குறித்து விளக்கமளிப்பதெல்லாம் பிரதமர் மட்டுமே.
“இதை இருகட்சியினரும் பங்கேற்கும் வகையில் மாற்றி அமைக்கப்போகிறோம். உயர்ப்பதவி வேட்பாளர்கள் ஒவ்வொருவரையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்பார்கள்.
“அதாவது நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அரசாங்க உயர் அதிகாரிகளை நியமிக்கும் அரசாங்க விவகாரத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கும் வாய்ப்பளிப்போம். உயர்ப்பதவிகளுக்கு நியமிக்கப்படுவோர் தகுதியானவர்களாக இருப்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிப்படுத்திக் கொள்வார்கள்”, என மகாதிர் கூறினார்.
மற்றவற்றோடு இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ், சட்டத்துறைத் தலைவர் போன்றோர் நியமனங்களில் இந்த முறை பின்பற்றப்படும் என்றாரவர்.
ஹரப்பான் அரசாங்கத்தில் பிரதமரின் அதிகாரமும் ஒரு கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கும்.
அறிக்கை மேல் அறிக்கை கொடுகிறார்கள் பக்கத்தான் ஹரப்பான் அரசியல்வாதிகளே… கேட்பதற்கும் படிபதற்கும்… பத்து தேன் கூடுகள் ஒன்று இணைந்து தேனை கொடுபது போல் உள்ளது. உங்கள் பேச்சுக்கள் அறிக்கைகள்… நீங்கள் சொல்வதும் அறிக்கை விடுவதிலும் பார்க்கும் போது தூக்கம் மறந்து போய் விடுகிறது. இப்போதே கணவில் மிதக்கிறோம்!…என்னையே ஒருமுறை கிள்ளிப் பார்க்கிறேன்!… ஐயா, சாமிகளே, அறிக்கை மன்னர்களே, இவையெல்லாம் சாத்தியம் படுமா. அதிலும் தமிழர்களுக்காகவ என்று மலைப்பாக உள்ளது. ஒவ்வொரு தேர்தல் சமயத்தில் இப்படி அறிக்கைகள் வருவது சகஜம்பா.. அரசியல் வாதிகளுக்கு இது எல்லாம் சகஜம்பா என்று ஒரு சினிமா டைலாக் உண்டு. பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியை பிடித்தால் ஐந்து ஆண்டுகள் அவர்களின் கையில். அது உண்மைதானே… இப்போது சொல்லும் ஒவ்வொரு அறிக்கைகளும் பேச்சுக்களும் முழுமையாக உத்தரவு கடிதம் கொடுக்க வேண்டும் எங்களுக்கு… நாங்கள் உங்களை நம்பி நம்பி இருந்தோம்… சுதந்திரம் அடைந்து பல வருடங்கள் ஆகியும் இன்னும் சிவப்பு அடையாள அட்டை வைத்து இருப்போர் கணக்கு இல்லாதவை.! முன்பு இருந்த பிரதமர் மகாதீர் அவர்கள் சபாவில் பாகிஸ்தான் காரன்களுக்கு நீல அடையாள அட்டை கொடுத்த தாக அறிந்த ஒன்று அது எத்தனை சதவிதம் உண்மை என்று தெரியவில்லை!. இருப்பினும் இன்று அதேமுன்னால் பிரதமர் அவரின் தேர்தல் அறிக்கையில் எல்லா இந்தியர்களுக்கும் இந்த நாட்டில் பிறந்தவர்களுக்கு நீல அடையாள கொடுக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுக்க வேண்டும். இதுதான் எங்கள் பல கோரிக்கைலில் இதுவும் ஒன்று. பிரதமர் நஜிப் அவர்கள் பலருக்கு இந்தியர்களுக்கு நேரடியாக அவரின் கையால் கொடுத்தார் நீல அடையாள அட்டை. மறுக்க முடியுமா உண்மை. முன்னால் பிரதமர் மகாதீர் அவர்களே. மலாய் சமுகதினர்களுக்கு நீங்கள் நிறைய செய்தீர்கள். பிறகு உங்கள் வாயாலேயே சொன்னிர்கள் அவர்கள் சீக்கிரம் மறந்து விடுவார்கள் என்று. ஆனல் நாங்கள் உங்களையும் மறக்க மாடோம் ஒரு தாய் கட்சி பெருச்சாளியும் மறக்க மாடோம். இன்று உங்கள் பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் அறிக்கையில் தமிழர்களின் கோரிக்கைகள் நன்றாக பார்த்து பார்த்து நிச்சயம் தீர்து வைப்பேன் என்று சொல்லுங்கள். அது நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் எங்களின் கோரிக்கைகள் தீர்த்து வைக்க படும் என்று சொல்லுங்கள்….செய்விர்களா…செய்யணும்… அதுவே இன்று தமிழர்களின் தாகம்..ஏக்கம்…நன்றி
பிரதமரின் அதிகாரத்தை வரையறுக்கப்படவேண்டும்.தேர்தலில் தோற்றவர்களை அமைச்சர்களாகவோ துணை அமைச்சர்களாகவோ நியமிக்கக் கூடாது.பொதுச்சேவைத் துறையிலும் சரி உயர்கல்வி கூடங்களிலும் சரி கல்வி உபகார்ச்சம்பளம் வழங்குவதிலும் சரி எல்லா இனங்களுக்கும் அறிவுத்திறன் அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.இதை பக்காத்தான் செய்யுமா?
நமது நாட்டில் மூவினத்துக்கும் சொந்தமான இந்த பூமியில் அரசு உயர் அதிகாரிகள் பூமி புத்ரா மட்டுமே இருக்க வேண்டும் என்ற கொள்கையை அமல் படுத்தியத்தியதும் அதை பிடிவாதமாக செயல் படுத்தியதும் இந்த முன்னாள் பிரதமர் மாகா தீரர் தானே ! மீண்டும் ஒரு முறை ஆட்சியை பிடித்து மிச்சம் மீதி இருக்கும் இந்தியர்களையும் ஒழிப்பதற்கு தூபம் போட்டு கொண்டு இருக்கின்றார்
! நமது இந்திய எதிர் கட்சி தலைவர்களும் அரசியல் லாபத்திற்ககே அவர் வால் பிடித்து அலைகிறார்கள் ! அவரின் ஆச்சியின் கீழ் புறக்கணிக்கப்பட்டு ! வாழ்வாதாரம் இழந்து சொந்த பூமியில் ! பூமி புத்ரா இல்லை என்ற ஒரே காரணத்துக்காகே இன்று அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் எந்த தமிழனும் ! எந்த இந்தியனும் இவரின் பேச்சை கேட்க்க தயாராக இல்லை !! ஏமாந்தது போதும் மக்களே ! விழித்துக்கொள்ளுங்கள் ! பிழைத்துக்கொள்ளுங்கள்
!!