கெராக்கான் மகளிஎ அணி தலைவர் டான் லியான் ஹோ, 14வது பொதுத் தேர்தலில் பேராக், ஜாலோங்கில் களமிறக்கப்படுவார். ஜாலோங், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
அத்தொகுதியை டான் திரும்பக் கைப்பற்றுவார் என்ற முழு நம்பிக்கை தமக்குண்டு எனக் கட்சித் தலைவர் மா சியு கியோங் கூறினார்.
ஜாலோங் கெராக்கான் வசமிருந்த தொகுதிதான் என்றும் 13வது பொதுத் தேர்தலில் கெராக்கான் அதை டிஏபியிடம் இழந்தது என்றும் அவர் சொன்னார்.
“என்றாலும் கடந்த நான்காண்டுகளாக ஜாலோங்கில் தொடர்ந்து சேவையாற்றி வருகிறோம். அப்பகுதி மக்களின் மனம் கவர டான் கடுமையாகப் பாடுபட்டு வருகிறார்.
“அதைத் திரும்பக் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது”, எனத் தோட்டத் தொழில், மூலப்பொருள் அமைச்சருமான மா கூறினார்.