பொக்கோக் செனா எம்பி மாபுஸ் ஒமார், அத்தொகுதியில் பாஸ் கெடாவின் பிரபல கால்பந்தாட்ட வீரர் ரதி முகம்மட் டினைக் களமிறக்கினாலும்கூட வெற்றி பக்கத்தான் ஹரபானுக்குத்தான் என்று உறுதியாக நம்புகிறார்.
“மக்கள், மாநிலத்திலும் நாட்டிலும் மாற்றத்தை விரும்புவதால் இத் தொகுதியில் பக்கத்தான் ஹரபான் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்”, என மாபுஸ் மலேசியாகினி தொடர்பு கொண்டபோது கூறினார்.
பொக்கோக் செனாவில் பாஸின் வேட்பாளராக ரதி,53, போட்டியிடலாம் என்று சினார் ஹரியானில் வெளிவந்த செய்தி குறித்துக் கருத்துரைத்தபோது மாபுஸ் அவ்வாறு கூறினார்.
ரதி, பொக்கோக் செனாவில் பாஸ் நிகழ்வுகள் பல வெற்றிகரமாக நடக்க உதவியுள்ளதாகக் கூறினார். ஆனால், ஒரு வேட்பாளராக களமிறக்கப்படுவதை நினைத்துக்கூட பார்த்ததில்லை என்றார்.