ஹாவர்ஸ்ட் கோர்ட் இயக்குனர் பதவியிலிருந்து நஸிபுடின் நஜிப் விலகிக்கொண்டார்

கடந்த சில வாரங்களாக குழப்பமான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டிருந்த ஹாவர்ஸ்ட் கோர்ட் இண்டஸ்டிரிஸ் பெர்ஹாட்டின் இயக்குனர் பதவியிலிருந்து நஸிபுடின் நஜிப் விலகிக்கொண்டார்.

மரத்திலான பொருள்களை உற்பத்தி செய்து வந்த அந்தப் பிரபல்யமற்ற நிறுவனத்தின் இயக்குனராக பிரதமர் நஜிப் ரசாக்கின் மகன் நியமிக்கப்பட்ட பின்னர் அதன் சந்தைப் பங்குகளின் விலை தீடீரென்று உயர்வு கண்டு பங்குச் சந்தையின் கவர்ச்சியான பங்காக விளங்கியது.

பர்சா ஷகாம் வலைதளத்தில் இன்று பதிவு செய்யப்பட்ட அறிவிப்பில் “இயக்குனர் வாரியத்தின் மாற்றங்களின்” ஓர் அங்கமாக நஸிபுடினின் பதவி துறந்தார் என்று கூறப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தில் 3,982,000 சாதாரண பங்குகள் அல்லது மொத்த பங்குகளில் 1.7 விழுக்காட்டு பங்குகளை நஸிபுடின் இன்னும் தன்வசம் வைத்திருப்பதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.