எதிரணியினர் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால் சீனாவுடனான உறவுகளில் சரிவு ஏற்படும் என்று எச்சரிக்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்.
சீனாவுடன் தொடர்புள்ள திட்டங்களைத் தாக்கிப் பேசுவதை எதிரணியினர் வழக்கமாகக் கொண்டிருப்பதாக பிஎன் தலைவர் கூறினார்.
“இந்நிலையில் எதிரணியினர் ஆட்சியைப் பிடித்தால் சீனாவுடனான உறவுகள் நலிவடையும்.
“மலேசிய-சீன உறவுகளுக்காக, அப்படிப்பட்ட நிலை ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்”. பிரதமர் இன்று கோலாலும்பூர், ஸ்ரீகெம்பாங்கானில் மலேசிய சீனர் சங்கச் சம்மேளனத்தின் சீனப் புத்தாண்டு உபசரிப்பில் கலந்துகொண்டார்.
“எடுத்துக்காட்டுக்கு ஃபோரெஸ்ட் சிட்டியில் அடுக்ககங்கள் அல்லது கொண்டோமினியம் வாங்குவோருக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்படும் என்கிறார்கள், குவாந்தானில் உள்ள மலேசிய- சீனத் தொழில் பூங்கா சீனாவின் ஒரு பகுதி என்றும் அதனுள் மலேசியர்கள் நுழைய முடியாது என்றும் கூறுகிறார்கள்.
“இதெல்லாம் மலேசிய-சீன உறவுகளைக் கொச்சைப்படுத்தும் செயல்களாகும்”, என்று நஜிப் குரிப்பிட்டார்.
சீனாவுக்காக நஜிப் பரிதாப்ப்படுவது இருக்கட்டும். சீனா நல்ல நண்பணா இருக்க மலேசியாவுக்கு என்ன செய்த து? தன்னை காப்பாற்றினால் அமேரிக்காவின் பொருளாதாரத்துக்கும் தான் பெரிய உதவி செய்வதாக கூறிய நஹிப்பை- ஒன்றாம் நம்பர் திருடன் என்று அறிமுகப்படுத்திய அமெரிக்காவே மலேசியா மக்களின் உண்மையான நண்பன்.
ada pongeppa india sea base singapore il irukkuthu so china karen malaysia karen ooril se base vacheikka adi podurahn. ithu theriyatha ungellukku yehnna noo sollurethu
அறிவியல் கண்டுபிடிப்புக்களை அல்லி அல்லி இலவசமாக தரும் அமெரிக்காவே, உலகியல் நண்பன் ! ஆனால் வெளியுறவு கொள்கையில்தான் பல நாடுகள் அதிருப்தியில் உள்ளன ! கலாச்சாரத்தில் பயன் படுத்தவே முடுயாதவர்கள்; நம்ம பாஷயில் சொல்ல வேண்டும் என்றால் : “டேய் சல்லி பயலே , தள்ளி படுடா !”. இருப்பினும் கம்யூனிச சித்தாந்தத்தை பின்னுக்கு தள்ளி ஜனநாயகத்தை வலியுறுத்தும் அமெரிக்காவே சிறந்த நண்பன் .