பாஸ் கட்சி ககாசான் செஜாத்ரா கூட்டணியில் உள்ள அதன் பங்காளிக்கட்சிகளுடன் இன்று கெடா, அலோர் ஸ்டாரில் 14வது பொதுத் தேர்தலுக்கான அதன் தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டது.
கோட்டா சராங் சிமுட்டில் கெடா பாஸ் வளாகத்தில் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் அந்த அறிக்கையை வெளியிட்ட நிகழ்வில் பாரிசான் ஜமா இஸ்லாமியா செ- மலேசியா (பெர்ஜாசா) துணைத் தலைவர் பிரிகேடியர்- ஜெனரல் (ஓய்வு) ஹஷிம் அப்ட் கரிம், பார்டி ஈக்காத்தான் பங்சா மலேசியா (ஈக்காத்தான்) துணைத் தலைவர் டாக்டர் சமருடின் முகம்மட் ரெஜாப் முதலானோர் கலந்து கொண்டனர்.
ஹாடி அவரது உரையில், எதிர்வரும் தேர்தலில் பாஸ் கெடாவை மறுபடியும் கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நல்ல கனவு!
கிளாந்தானில் கவுழ போரதால, கெடாவில் பிடிப்போம் என்று ஆறுதல் சொல்லிக்கிங்க, வாழ்த்துகள்