இன்று பெக்கான் செல்லும் டாக்டர் மகாதிர் முகம்மட், அதன் நடப்பு எம்பி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை நிராகரிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்ளவே அங்கு செல்வதாகக் கூறினார்.
“நஜிப் பெக்கானைச் சேர்ந்தவர் என்பது எனக்குத் தெரியும். உள்ளூர்க்காரர்தான். உள்ளூர்க்காரராக இருந்தாலும் தப்பு செய்தால் நிராகரிக்கத்தான் வேண்டும்”, என பக்கத்தான் ஹரபான் தலைவர் இன்று குவாந்தானில் செய்தியாளர்களிடம் கூறினார்.
மகாதிர் இன்று பின்னேரம் பெக்கான் சின்னி பகுதிக்குச் சென்று ஓராங் அஸ்லி மக்களைச் சந்திப்பார். பின்னர் பெல்டா, சின்னியில் செராமா ஒன்றில் உரையாற்றுவார்.