பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மார்ச் இறுதியில், அரசாங்கம் புதிய தேர்தல் எல்லைகள்மீதான அறிக்கையைத் தாக்கல் செய்த மறுவாரம், நாடாளுமன்றத்தைக் கலைக்கக்கூடும் என த ஸ்டார் அறிவித்துள்ளது.
“நாடாளுமன்றம் கலைக்கப்படும் தேதி கிட்டத்தட்ட நிச்சயமாகி விட்டது. மார்ச் 28, 29 அல்லது 30-இல் கலைக்கப்படலாம். அதற்கான அறிகுறிகள் தெரிகின்றன”, என்று ஸ்டார் மீடியா குழுமத்தின் நிர்வாக இயக்குனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான வொங் சுன் வாய் பதிவிட்டிருக்கிறார்.
தேர்தல் தொகுதிகள் திருத்தி அமைக்கப்பட்டதுமீதான தேர்தல் ஆணையத்தின் அறிக்கை அடுத்த திங்கள்கிழமை, மார்ச் 19க்குள் எம்பிகளுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துணைப் பிரதமர் கூறியுள்ளதுபோல் ஒரு சாதாரண பெரும்பான்மையைக் கொண்டு அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி விடலாம், அதை மேலவைக்குக் கொண்டுசெல்ல வேண்டிய அவசியமில்லை.
எல்லா தில்லுமுல்லு வேலைகளும் தயார்நிலைக்கு வந்திருக்கும். நம்பிக்கை நாயகன் அடுத்த பிரதமனே.
அனைவரும் காத்திருந்த நேரம் வந்து விட்டது. நல்ல மாற்றத்திற்கும் நேரம் வந்து விட்டது. ம.இ.க. இந்த தடவையும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியைத் தவிர்த்து மற்றதெல்லாம் மண்ணைக் கவ்வும் என்பதில் ஐய்யமில்லை. தேர்தலுக்குப் பின் ம.இ.க. வுக்கு இருண்ட காலம் காத்திருக்கு.