நஜிப் தொடர்ந்து இருந்தால் நாடு குட்டிச்சுவர்தான், மகாதிர் கூறுகிறார்

 

பக்கத்தான் ஹரப்பான் நாட்டிற்கு மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதை நம்ப மறுப்பவர்கள் சிலர் இருக்கின்றனர் என்பதை இன்று ஒப்புக்கொண்ட முன்னாள் பிரதமர் மகாதிர், இதற்கான மாற்று மிக மோசமானதாக இருக்கும் என்று எச்சரித்தார்.

சூழ்நிலையை மாற்றியமைக்க பக்கத்தான் ஹரப்பானால் எதுவும் செய்ய முடியாது என்ற கருத்தைக் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், நஜிப் தொடர்ந்து அவரது கொள்ளைக்காரராட்சியை நிலைநிறுத்த முடிந்தால் நாட்டின் அழிவு மிக மோசமாகி விடும் என்றாரவர்.

நாட்டின் கடன் தொடர்ந்து கூடிக் கொண்டே போகும்; நிலம் விற்கப்படும் என்றும் அவர் கூறிக்கொண்டார்.

பக்கத்தான் ஹரப்பானுக்கு நாட்டை பழைய நிலைக்குக் கொண்டுவருவது அவ்வளவு சுலபமல்ல, ஆனால் நாங்கள் ஆட்சியில் இருந்தால் நஜிப் நாட்டை இனிமேலும் பாழாக்க முடியாது என்றாரவர்.

நாட்டின் பொருளாதாரம், நிதிகள் மற்றும் சமுதாய-அரசியல் ஆகியவற்றை பாதுகாத்து அவற்றை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான திறமை எங்களிடம் இருக்கிறது என்று மகாதிர் மேலும் கூறினார்.