பிகேஆர் எம்பி நூருல் இஸ்ஸா கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூரைப் புன்னகையுடன் பேசச் சொல்ல அதற்கு அமைச்சர் அளித்த பதிலால் மக்களவை கலகலப்பானது.
பிகேஆர் எம்பி டான் கீ குவோங் அரசாங்கத்தின் வாடகைவழி சொந்தமாக்கிக்கொள்ளும் திட்டம் குறித்துக் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில் குரலை உயர்த்திப் பேசினார். அப்போது குறுக்கிட்ட நூருல் இஸ்ஸா புன்னகையோடு பதில் சொல்லலாமே என்றார்.
அதற்கு தெங்கு அட்னான் “உங்களுக்காக, புன்னகை செய்வேன்”, என்று நூருல் இஸ்ஸாவிடம் சொல்ல அவையில் சிரிப்பலை பரவியது.
“எனக்கு முகம்தான் இப்படி, மனசு தங்கம்.
“விலாயா பெர்செக்குத்துவான் என்னை மடக்கி விட்டீர்கள்”, என்று அமைச்சர் வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.