அம்னோ பேச்சுரிமையை முக்கியமற்ற அடிக்குறிப்பாக மாற்றிவிடலாகாது: ரயிஸ் அறிவுறுத்து

முன்னாள்   அமைச்சர்   ரயிஸ்   யாத்திம்   அம்னோ   பேச்சுரிமையையும்  தலைவர்களைக்  குறை  சொல்லும்   உரிமையையும்   முக்கியமற்ற   அடிக்குறிப்பாக   நினைத்து   ஒதுக்கிவிடக்  கூடாது    என்றார்.

அம்னோ   தகவல்   தலைவர்   அனுவார்  மூசாவின்  கூற்றுக்கு  எதிர்வினையாக    ரயிஸ்   நேற்றிரவு   முகநூலில்  இவ்வாறு   பதிவிட்டிருந்தார்.  1எம்டிபி   ஊழல்மீது   மலேசிய     அதிகாரிகள்   விசாரணை   செய்ய   வேண்டும்   என்று   கேட்டுக்கொண்ட   ரயிசையும்   முன்னாள்   அமைச்சர்  ரபிடா    அசிசாவையும்   அனுவார்  மூசா   சாடியதாகக்  கூறப்படுகிறது.

“அம்னோ  தகவல்   தலைவரே,  தகவலளிக்கும்  உங்கள்  கடமையை  முறையாகச்  செய்யுங்கள்.  உண்மை  நிலவரத்தைப்  புரிந்துகொண்டு   கருத்துச்  சொல்லுங்கள்.

“மக்கள்  மகிழ்ச்சியாக   இல்லை. டான்ஸ்ரீ  ரபிடாவும்   நானும்   அபாய  பேர்வழிகள்  அல்ல.  ஆபத்து  இன்னொரு  பக்கத்தில்”,  என்றாரவர். பக்கத்தான்  ஹரப்பானைத்தான்  ரயிஸ்  குறிப்பிட்டார்.

“அம்னோவில்   பேச்சுரிமையை   வெறும்   அடிக்குறிப்பாக   மாற்றி  விடாதீர்கள்”,  என்றார்.