சுத்தமான தேர்தலா?, விவாதம் நடத்த இசி தலைவருக்கு பெர்சே சவால்

 

மலேசியாவில் தேர்தல்கள் எப்போதுமே சுத்தமானதாக இருந்திருக்கின்றன என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமட் ஹசிம் அப்துல்லஈ கூறிக்கொண்டதற்கு அதன் மீது பகிரங்க விவாதம் நடத்துவதற்கு அவருக்கு பெர்சே சவால் விட்டுள்ளது.

இன்று மாலை அந்தச் சவால் பல டிவிட்ஸ்கள் மூலம் விடுக்கப்பட்டன.

தேர்தல் நடவடிக்கைகள் வெளிப்படையானதாக இருந்திருக்கின்றன என்ற முகமட் ஹசிம்மின் கூற்றுக்கு சவால் விடுத்த பெர்சே அந்த விவாதம் நேரடியாக ஒலிபரப்பப்பட வேண்டும் என்று பெர்சே அதன் முதல் டிவிட்டில் கூறியது.

பெர்சேயின் இரண்டாவது டிவிட்டில், விவாதத்திற்கு இது சரியான நேரம் ஏனென்றால் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் இன்னும் தொடங்கவில்லை என்று அது கூறியது.

மலேசியாவில் தேர்தல்கள் எப்போதும் சுத்தமானதாகவும் வெளிப்படையானதாகவும் இருந்துள்ளன. மலேசியாவின் தேர்தல் அமைவுமுறையை மற்ற பல நாடுகள் பின்பற்றியுள்ளன என்று ஹசிம் ஒரு விட்டியோ பதில் கூறியுள்ளார்.

பெர்சே விடுத்துள்ள சவாலுக்கு எந்த முன்நிபந்தனையும் இல்லை என்று பெர்சேயின் இடைக்காலத் தலைவர் ஷாருல் அமான் முகமட் ஷாரி தொடர்பு கொண்ட போது மலேசியாகினியிடம் கூறினார்.