சுங்கை பீசி விமானத்தளம்:மிகப் பெரிய சலுகைவிலையில் 1எம்டிபிக்கு விற்கப்பட்டது ஏன்?

பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா,  மிகப் பெரிய சலுகைவிலையில் 1மலேசியா மேம்பாட்டு நிறுவனத்துக்கு நிலம் விற்கப்பட்டது ஏன் என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய புவா, சுங்கை பீசியில் 495 ஏக்கர் பரப்பளவுகொண்ட நிலம் விற்கப்பட்ட விலையைப் பார்க்கையில் அரசாங்கம் அந்நிறுவனத்துக்கு ரிம3பில்லியன் உதவித் தொகை கொடுத்துள்ளதுபோல் இருக்கிறது என்றார்.

“ஒரு சதுர அடிக்கு ரிம240 என்ற விலையில் அந்த சுங்கை பீசி நிலத்தின் மதிப்பு ரிம5.2பில்லியன். இவ்வளவு உயர்ந்த விலைக்குப் போகக்கூடிய அந்நிலத்தை அரசாங்கம் 1எம்டிபி-க்கு ரிம1.6பில்லியனுக்கு, அதாவது ரிம3.6பில்லியன் குறைத்துக் கொடுத்துள்ளது”, என்றாரவர்.