பிஏசி: ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே என்எப்சி-க்கு கடன் கிடைத்து விட்டது

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னரே அது குறைந்த வட்டியைக் கொண்ட கடனை பயன்படுத்த முடிந்துள்ளது.

அந்தத் தகவலை பிஏசி என்ற பொதுக் கணக்குக் குழுத் தலைவர் அஸ்மி காலித் வெளியிட்டார்.

விவசாய, விவசாய அடிப்படைத் தொழில் அமைச்சின் பல அதிகாரிகளை அந்தக் குழு இன்று பேட்டி கண்ட பின்னர் அஸ்மி அவ்வாறு தெரிவித்தார்.

“இந்த விஷயத்தில் நிறுவன நடவடிக்கைகளுக்குப் பணத்தை மீட்பதற்கு வசதியாக அமைச்சின் (சம்பந்தப்பட்ட) அங்கீகாரம் தேவைப்படும் சிறப்புக் கணக்கு ஒன்றில் 2009ம் ஆண்டும் அந்தப் பணம் சேர்க்கப்பட்டுள்ளது.”

“ஆனால் 2009 அந்தப் பணம் கொடுக்கப்பட்ட பின்னர் ஒராண்டு கழித்து 2010ம் ஆண்டில்தான் ஒப்பந்தமே கையெழுத்திடப்பட்டது,” என அஸ்மி நிருபர்களிடம் கூறினார்.

பிஏசி, என்எப்சி சம்பந்தப்பட்ட மற்ற பிரச்னைகளையும் கண்டு பிடித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

மோசமான நிர்வாகம், அங்கீகாரம் கொடுப்பதில் தாமதம், நோக்கங்களில் மாற்றங்கள் ஆகியவை அவற்றுள் அடங்கும் என்றார் அவர்.