“நாடு என்னும் முறையில் நாம் சுதந்தரமடைந்து 50 ஆண்டுகள் நிறைந்து விட்டன. ஆனால் நாம் இன்னும் பிளவுபட்டுள்ளோம். ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்க்கிறோம். இதற்கு பல்வேறு சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையை வளர்க்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்களும் அரசியல்வாதிகளுமே காரணம்.”
டமன்சாரா உத்தாம மெதடிஸ்ட் தேவாலய 12 பேர் பகிரங்கமாகப் பேசத் தயார்
மலேசியாவில் பிறந்தவன்: இன அடிப்படையில் பிளவுபடுத்தி ஆட்சி புரியும் முயற்சி தோல்வி அடைந்ததால், அவர்கள் இப்போது முஸ்லிம்- முஸ்லிம் அல்லாதவர் எனப் பிரித்தாள முயலுகின்றனர்.
மக்கள் ஒருவருக்கு ஒருவர் மீது நம்பிக்கையும் புரிந்துணர்வும் வைத்திருந்தால் மட்டுமே நாடு உயிர் பிழைத்திருக்க முடியும். மக்கள் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழ விருப்பம் கொண்டிருக்க வேண்டும்.
எந்த அடிப்படையிலும் அந்த அரசியல்வாதிகள் நம்மைப் பிரித்தாளுவதற்கு நாம் அனுமதிக்கவே கூடாது.
பால் வாரென்: கடந்த 20 ஆண்டுகளில் அம்னோ சாதிக்க முடியாத-மலாய் ஒற்றுமையை- கிட்டத்தட்ட அந்த விவகாரம் அடைந்து விட்டது. மே 13 பூச்சாண்டியை முடிந்த அளவுக்குப் பயன்படுத்தப்பட்டு விட்டது. பெர்சே 1.0 பூச்சாண்டி மறைந்த பின்னர் சீனர்களைத் தாக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டார்கள். அது முடிந்ததும் சிங்கப்பூர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இந்துக் கோவில்களும் உடைக்கப்பட்டன.
இப்போது மிக மௌனமாக கிறிஸ்துவர்களை கண்டனம் செய்வது தொடங்கியுள்ளது. முதலில் ‘அல்லாஹ்’ விவகாரம். அடுத்து மதம் மாற்றும் விஷயம். அவர்கள் புனிதத் தலங்களில் சோதனை நடத்தினர். கிறிஸ்துவர்கள் மீது எல்லா வகையான குற்றச்சாட்டுக்களையும் சுமத்துகின்றனர்.
கிறிஸ்துவ சமயத்துக்கு ஆதரவாக இஸ்லாத்தை முஸ்லிம் ஒருவர் கைவிடுவதாக கூறப்படும் வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. அது உண்மையோ பொய்யோ தூண்டி விடுவதற்குப் போதுமானது.
ஜயிஸ், அம்னோ ஆகியவற்றின் குற்றச்சாட்டுக்களை ஹரப்பான் கம்யூனிட்டி நிகழ்வில் காணப்பட்ட 12 முஸ்லிம்களும் மறுத்தால் அவர்கள் வேறு எந்த விஷயத்தையாவது தொடக்கி வைப்பார்கள்.
சியாப்பா ராஜா: கிறிஸ்துவ சமயமும் இஸ்லாத்தைப் போன்று யாரும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லாத சமயமாகும். இறைவனை பிரார்த்திப்பதும் கடவுளை வணங்குவதும் ஒருவருடைய தனிப்பட்ட உரிமை ஆகும்.
சமயத்தைப் பாதுகாக்கிறோம் என்னும் பெயரில் ஒவ்வொரு முஸ்லிமையும் எல்லா நேரத்திலும் கண்காணித்துக் கொண்டு கைது செய்வதற்கு ஜயிஸ் போன்ற அமைப்புக்கள் நமக்கு அவசியமா?
அந்த 12 முஸ்லிம்கள் முதிர்ச்சி அடைந்தவர்கள். தாங்கள் ஏன் அந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளோம் என்பது அவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
சிலாங்கூர் பிகேஆர் அரசாங்கத்தைத் தாக்குவதற்கு தயாரிக்கப்பட்ட அரசியல் தந்திரமே அதுவாகும்.
அலான் கோ: ஒரு குதிரையைப் பத்துப் பேர் நீர்க் குட்டைக்கு அருகில் இழுத்துச் செல்லலாம். ஆனால் அந்தக் குதிரை விரும்பா விட்டால் நீரைக் குடிக்க வைக்க முடியாது.
அந்த விருந்தில் கலந்து கொண்டிருந்த 12 முஸ்லிம்களும் அல்லாஹ் மீது வலுவான நம்பிக்கை வைத்திருந்தால் அவர்களை யாரும் மாற்றவே முடியாது.
அவர்கள் துணிச்சலாக வெளியில் வந்து தங்கள் மீது தவறாகக் குற்றம் சாட்டப்படுகிறது என்பதைக் கூற வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
நியாயமானவன்: அந்த விருந்தில் கலந்து கொண்ட 12 முஸ்லிம்களும் மற்ற சமயங்களைச் சார்ந்த மலேசியர்களுடன் கலந்துரையாடும் மனப் பக்குவத்தையும் மன வலிமையையும் கொண்டிருந்ததாக டெரன்ஸ் நெட்டோவின் கட்டுரை குறிப்பிடுகிறது.
மலேசியாவைப் போன்ற பல இன நாட்டுக்கு அந்த ‘சிறந்த’ சூழ்நிலையாகும். அந்த சூழ்நிலையில் ஒவ்வொரு மலேசியரும் அடுத்தவரை சந்தேகக் கண்களோடு பார்க்காமல் இருக்க முடியும்.
நாடு என்னும் முறையில் நாம் சுதந்தரமடைந்து 50 ஆண்டுகள் நிறைந்து விட்டன. ஆனால் நாம் இன்னும் பிளவுபட்டுள்ளோம். ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்க்கிறோம். இதற்கு பல்வேறு சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையை வளர்க்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்களும் அரசியல்வாதிகளுமே காரணம்.
ஸ்விபெண்டர்: டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயத்தில் முஸ்லிம்கள் மதம் மாற்றப்படுவதற்கு வலுவான ஆதாரங்கள் ஜயிஸிடம் இருந்தால் அந்த தேவலாயம் மீது தொடர் தாக்குதல் தொடங்கப்பட்டிருக்கும். இப்போதைய கண்ணாம்பூச்சி ஆட்டம் இருக்காது.
அடையாளம் இல்லாதவன்: அந்த விவகாரத்தை மிகவும் கவனமாக கையாள வேண்டும். இல்லை என்றால் சமயங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தி விடும்.
கிறிஸ்துவர்கள் “நற்செய்தியை” பரப்புவதாகக் கூறும் தங்கள் நடவடிக்கைகளில் மித மிஞ்சி செயல்படக் கூடாது. அது கிறிஸ்துவர்களுக்கு வேண்டுமானால் “நற்செய்தியாக” இருக்கலாம். மற்றவர்களுக்கு அல்ல.
கிறிஸ்துவர்கள், மாணவர்களையும் மரணப்படுக்கையில் இருக்கும் நோயாளிகளியும் பின் தொடர்ந்து கிறிஸ்துவ சமயத்துக்கு மாறினால் சொர்க்கத்துக்குப் போகலாம் என வாக்குறுதி அளிப்பதை நான் நேரடியாகப் பார்த்துள்ளேன்.
அதற்காக நான் ஜயிஸ் செய்ததை அங்கீகரிக்கவில்லை. என்றாலும் அதில் ஒரளவு உண்மை இருக்கத்தான் வேண்டும். எனது கிறிஸ்துவத் தோழர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இது தான்: உங்கள் விருப்பம் போல எவ்வளவு வேண்டுமானால் உங்கள் சமயத்தை பின்பற்றுங்கள். ஆனால் மற்றவர்களை மதம் மாற்ற வேண்டாம். அனைவருக்கும் சமாதானம் உண்டாகட்டும். நன்றாக வாழுங்கள். சந்தோஷமாக இருங்கள்.
அர்கோனிஸ்ட்: கிறிஸ்துவர் அல்லாதவர்களுக்கு எல்லா கிறிஸ்துவர்களும் சமயப் போதனை செய்வதாகவோ அல்லது செல்வத்தைக் காட்டி ஏழைகளை மதம் மாற ஆசை ஊடுவதாகவோ குற்றம் சாட்ட வேண்டாம்.
இந்துக்களும் பௌத்தர்களும் மற்ற சமயத்தவரும் தங்களைச் சார்ந்துள்ள மக்களுக்கு சமய அறிவை ஊட்டுவதுடன் அவர்கள் தொடர்ந்து பின்பற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
இறுதியில் எனது சமயத்தை மாற்றிக் கொள்வதா அல்லது எதனை நம்புவது என்பதை முடிவு செய்வது என்னைப் பொறுத்த விஷயமாகும். பணத்துக்காக நான் என் சமயத்தை மாற்றிக் கொள்வதில் தவறு இல்லை என நான் எண்ணினால் அது யாருடைய தவறு? அத்துடன் அத்தகைய மக்களுக்கு தீர்ப்புச் சொல்ல நாம் யார்?