பெர்லிஸ் பெர்சத்து கிட்டத்தட்ட 4,000 அம்னோ உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டுள்ளது

 

14 ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பெர்லிஸ் பெர்சத்து கிட்டத்தட்ட 4,000 முன்னாள் அம்னோ உறுப்பினர்களை அதன் உறுப்பினர்களாக சேர்த்துக்கொண்டுள்ளது.

யார் வேண்டுமானாலும் பெர்சத்துவில் சேரலாம். தொகுதி அல்லது மாரில அளவில் அவர்களின் மனு நிராகரிக்கப்பட்டால், அவர்கள் நேரடியாக தலைமையகத்திற்கு மனு செய்யலாம் என்று பெர்லிஸ் பெர்சத்து தலைவர் அமிர் ஹாசான் இன்று அராவில் கூறினார்.

அந்த நிகழ்ச்சியில், முன்னாள் அராவ் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் ரஸ்லான் புத்ரா ஜமாலுல்லயில் பெர்சத்து உறுப்பினரானதற்காக ஒப்புதல் கடிதத்தை அமிர் அவரிடம் வழங்கினார்.