ரஸிட் ஹஸ்நோன், இஙா மக்களைவின் புதிய துணைத் தலைவர்கள்

பத்து பகாட் எம்பி முகமட் ரஸிட் ஹஸ்நோன் மற்றும் தெலுக் இந்தான் எம்பி இஙா கோர் மிங் ஆகிய இருவரும் மக்களைவையின் புதிய துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்

இவ்விருவரின் பெயர்களை மகாதிர் முன்மொழிய துணைப் பிரதமர் வான் அசிஸா வழிமொழிந்தர்.

எதிரணித் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி துணைத் தலைவர் பதவிக்கு பிஎன் பெலுரான் நாடாளுமன்ற உறுப்பினர் ரோனல்ஸ் கியான்டியின் பெயரை முன்மொழிந்தார். ஆனால், முன்னாள் துணைத் தலைவர் கியான்டி பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்ல.

பினாங்கின் முன்னாள் துணை முதலமைச்சரான பிகேஆரின் ரஷிட் 171 வாக்குகளும், பேராக் டிஎபி தலைவரான இஙா 124 வாக்குகளும், கியாண்டி 93 வாக்குகளும் பெற்றனர்.