நஜிப்: பிஎன் பிரச்சாரம் எளிமையானது, அதிக பணம் செலவழிக்க தேவையில்லை

அம்னோ வங்கிக் கணக்கு முடக்கம், சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இடைத்தேர்தலில், கட்சியின் பிரச்சாரத்தைப் பாதிக்காது என்று நஜிப் ரசாக் கூறினார்.

முன்னாள் பிரதமரும் அம்னோவின் முன்னாள் தலைவருமான அவர், இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்குக் கட்சிக்கு அதிக பணம் தேவையில்லை என்றார்.

“இந்தப் பிரச்சாரத்திற்கு மிகக் குறைந்தபட்ச பணமே போதுமானது.

“நாங்கள் அதை எளிய முறையில், ஆனால் மக்களிடம் அதிக நட்பு பாராட்டி, மக்களின் மனதை தொடும் அணுகுமுறைகளோடு பிரச்சாரம் செய்வோம்,” என்று இன்று காலை சுங்கை கண்டிஸ் ஆரம்ப சமயப் பள்ளியின் முன் சந்தித்தபோது கூறினார்.

பிஎன் உறுப்புக் கட்சிகள் இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் காணப்படவில்லையே ஏன் என்று கேட்கப்பட்டதற்கு, கடந்த பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து விடுபட, அவர்களுக்கு நேரம் வழங்கப்பட வேண்டும் என்றார்.

இருப்பினும், மஇகா தலைவர்கள் களமிறங்குவார்கள் என்றார் அவர்.

“ஜொகூர் மசீச ஒரு நாடாளுமன்றத்தையும் மஇகா இரண்டு நாடாளுமன்ற இடங்களை மட்டுமே கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் ஒரு சூழ்நிலையில் மாட்டியுள்ளனர் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்.

“இத்தகைய சூழ்நிலைகளில், அவர்களின் பலவீனங்கள் மற்றும் தலைமைகளின் சுய-பிரதிபலிப்புகள் பற்றி அவர்கள் ஆராய வேண்டும்.

“இது தற்போது நடந்து வருகிறது, எடுத்துக்காட்டாக, மஇகா புதிய தலைவரை தேர்ந்தெடுத்துவிட்டது, ஆனால் துணைத் தலைவர் மற்றும் உதவித் தலைவர்கள் தேர்தல் இன்னும் முடியவில்லை,” என்று அவர் விளக்கப்படுத்தினார்.