ஸ்ரீசித்தியா, பலாக்கோங் இடைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில்

ஸ்ரீசித்தியா  இடைத்  தேர்தலும்  பலாக்கோங்   இடைத்  தேர்தலும்   ஒரே   நாளில்,  செப்டம்பர்  8-இல்   நடைபெறும்   எனத்   தேர்தல்    ஆணையம்(இசி)  அறிவித்தது.

இரு   இடைத்  தேர்தல்களுக்கும்   வேட்பு  மனு   தாக்கல்   செய்யும்  நாளும்  ஒன்றே-   ஆகஸ்டு  18.

இரண்டுமே   போக்குவரத்து      வசதிகள்    கொண்ட   நகர்ப்புறங்களில்   நடந்தாலும்   தேர்தல்  பரப்புரைக்காக    முன் எப்போதுமில்லாத    வகையில்   21  நாள்கள்   வழங்கப்படுவது  குறிப்பிடத்தக்கது.

பலக்கோங்   சட்டமன்ற  உறுப்பினர்   எட்டி   இங்  தியன்    சீ(டிஏபி)   ஜூலை 20-இல்  சாலை  விபத்து   ஒன்றில்   காலமானதாலும்  ஸ்ரீசித்தியா   சட்டமன்ற   உறுப்பினர்    ஷஹாரிடின்   படருடின் (பிகேஆர்)  ஆகஸ்டு 2-இல்   புற்று  நோயினால்   காலமானதாலும்   அவ்விரு   இடைத்   தேர்தல்களும்   நடைபெறுகின்றன.