மூத்த செய்தியாளர் காடிர் ஜாசின் ஊடக மற்றும் தொடர்புகள் ஆலோசகராக பிரதமர் அலுவலத்தில் சேர்ந்துள்ளார்.
ஜாசின் அவரது நியமனக் கடிதத்தை ஜூலையில் பெற்றார் என்றும் அது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வரும் என்று தெரிகிறது.
ஊடக விவகாரங்கள் குறித்து பிரதமருக்கு “சிறப்பு ஆலோகர்” என்ற பதவி அளிக்கப்பட்டிருப்பதை அவர் தொடர்பு கொண்ட போது உறுதிப்படுத்தினார். அதிரப்பூர்வமான அறிவிப்பு நிலுவையில் இருப்பதால், அவர் மேற்கொண்டு எதுவும் கூற மறுத்து விட்டார்.
நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் குழுமத்தின் முன்னாள் ஆசிரியரான அவர், பிரதமர் மகாதிருடன் மிக நெருக்கமானவர் என்று நம்பப்படுகிறது.
மகாதிரின் தலைமையிலான பெர்சத்துவின் உச்சமன்ற உறுப்பினராகவும் அவர் இருக்கிறார்.
பக்கத்தான் ஹரப்பான் நிருவாகத்தின் தொடக்க காலத்தில் காடிர் மே 12 இல் அமைக்கப்பட்ட மேன்மக்கள் மன்றத்தின் பேச்சாளராக செயல்பட்டார். ஆனால், அவரது தனிப்பட்ட கருத்துகள் மேன்மக்கள் மன்றத்தின் கருத்துகளாக கருதப்படும் தர்மசங்கமான நிலையைத் தவிர்க்கும் பொருட்டு அவர் அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார்.