வேதமூர்த்தி: இன நல்லிணக்க சட்டவரைவுகள் அடுத்த ஆண்டில் தாக்கல் செய்யப்படும்

புத்ரா ஜெயா இன நல்லிணக்கத்துக்கு வித்திடும் மூன்று சட்டவரைவுகளை அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் எனப் பிரதமர்துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி கூறினார்.

“மூன்று சட்டவரைவுகளும் ஆராயப்பட்டு வருகின்றன. அவைமீது பொதுமக்களின் கருத்துகளும் பின்னூட்டங்களும் பெறப்படும்.

“எல்லாம் சீராக நடந்தேறினால் மூன்று சட்டவரைவுகளும் 2019 நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்”, என இன்று மேலவையில் கேள்வி நேரத்தின்போது வேதமூர்த்தி கூறினார்.