மலேசியாவுக்கு வசந்த காலம் வருகிறது என்ற பொய்யான தோற்றத்துக்கு பின்னணியில் யார் ?

நாட்டின் பெரும்பாலான சுயேச்சையான அரசியல் பார்வையாளர்களுக்கு இப்போது ஒரு விஷயம் மிகத் தெளிவாகத் தெரிகிறது.

அமைதியாகக் கூடுவதற்கு நமக்கு உள்ள உரிமையை கட்டுப்படுத்தும் புதிய உத்தேச சட்டமும் அதற்குத் தெரிவிக்கப்படும் ஆட்சேபமும் இவ்வாண்டு மலேசியா தினத்துக்கு முன் தின, அரசியல் தாராளமயம், சீர்திருத்தம் குறித்து பிரதமர் அளித்த வாக்குறுதிகள் மூலம் மலேசியப் பொது மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்த்துகின்றன.

கொடூரமான ஒடுக்குமுறையான சட்டங்களை கைவிடுவதாகவும் சமூக உரிமைகளை மேம்படுத்துவதாகவும் கூறும், இவ்வாண்டு செப்டம்பர் 15ம் தேதி வெளியிடப்பட்ட தொடக்கத் திட்டம் தலைகீழாக மாறியதற்கு என்ன காரணம்?

உண்மையிலேயே பிரகாசமான திட்டம் ஏதுமில்லை. ஆனால் அமைதியாக கூடுவதற்கு உரிமையை நசுக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட இழிவான நடவடிக்கையா?  அல்லது முக்கியத்துவம் குறைந்த பகுதிகளில் அரசியல் தாராளமயத்தை அமல் செய்து அரசாங்கம் அரசியல் தாராளமயத்தில் நம்பிக்கை வைத்துள்ளது என்னும் தோற்றத்தை உருவாக்கி விட்டு நாட்டின் அரசியல் சூழ்நிலையில் ஆதாயம் தேட முயலுவதா?

அப்படி என்றால் அதற்கு நேர்மாறாக திட்டமிடப்பட்ட வேளையில் கடந்த இரண்டு மாதங்கள் முழுவதும் ஒரு முறை மட்டுமல்ல பல முறை நாட்டில் நல்ல ஆளுமையயும் சமூக உரிமைகளையும் மேம்படுத்த பாரிசான் நேசனல் முயலுவதாக பறைசாற்றி நல்ல நாடகமாடிய பிரதமரைப் பாராட்ட வேண்டும். 

நம்மிடையே நெருப்புக் கோழிகள்

அந்த அமைதியாக கூடும் மசோதா மாற்றத்தைக் கொண்டு வரும் சட்டம் என்றும் தனிநபர் சுதந்திரத்துக்கு வழங்கப்பட்டுள்ள பெரிய முன்னேற்றப்படி என்றும் பிரதமர் இன்று கூட பாராட்டிப் பேசியிருக்கிறார்.

புதிய சட்டம் நிறைவேற்றப்படும் போது நமது அடிப்படை சுதந்திரம் பெருத்த முன்னேற்றம் காணும் என நம்புகின்ற ஒரே மனிதர் பிரதமராகத் தான் இருக்க முடியும்.

உத்தேச புதிய சட்டத்துக்குத் தெரிவிக்கப்பட்டு வரும் அதிகமான எதிர்ப்பை அவர் புரிந்து கொள்ளத் தவறினால், ஒன்று கூடுவதற்கான உரிமை மீதான சட்டத்தை மேம்படுத்துவது என்ற போர்வையில் அரசியல் எதிர்ப்பை ஒடுக்கும் அந்த இழிவான முயற்சி காரணமாக, வரும் ஆண்டுக்கான இந்த நாட்டின் சமூக உரிமைகள் மீதான அனைத்துலக மதிப்பீடுகளும் நேர்மைக்கான அவரது தோற்றமும் பெரிதும் சரிந்து விடும்.

அரசியல் ரீதியில் இத்தகைய நேர்மாற்றத்தை செய்யுமாறு பிரதமரை மற்ற சக்திகள் ஏதும் கட்டாயப்படுத்தியிருக்குமா?

அந்த அரசியல் ஏமாற்று வேலையில் பிரதமர் முக்கியமான நடிகர் இல்லை என்றால் டாக்டர் மகாதீர் முகமட், அவரது புதல்வர் முக்ரிஸ், துணைப் பிரதமர் முஹைடின் யாசின், இப்ராஹிம் அலி, அல்லது பேராசையுடைய நஜிப்பின் நெருங்கிய உறவினருமான உள்துறை அமைச்சர் ஆகியோர் அரசியல் தாராள மயம் மீது நேர்மாறாக நடந்து கொள்வதற்கு அவருக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டுமா?

மக்களவையில் விவாதிக்கப்படவிருக்கும்- வெறுப்பைத் தரும் அந்த மசோதாவை கொண்டு வருவதில் யார் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்களது நோக்கம் தெளிவானது. அமைதியாக கூடுவதற்கான சுதந்திரத்தை முன்னைப் போலவே கட்டுப்படுத்துவது, உலகில் மற்ற பகுதிகளில் இது போன்ற சர்வாதிகார ஆட்சிகளை வீழ்த்தி வரும் எதிர்ப்புக்களை ஒடுக்குவது ஆகியவையே அவை. அவ்வாறு செய்வதின் மூலம் மலேசியாவில் கட்டுப்பாடு இல்லாத அதிகாரத்துடன் சர்வாதிகார ஆட்சியை நீண்ட காலத்துக்குத் தொடர முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.