அநேகமாக அன்வார் பாண்டான் தொகுதியில் போட்டியிடக்கூடும், சிலாங்கூர் பாஸ் தயாராகிறது

அநேகமாக அன்வார் இப்ராகிம் பாண்டான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்று நம்பும் சிலாங்கூர் பாஸ். அதன் பாண்டான் தொகுதி தேர்தல் இயந்திரத்தை முடுக்கி விடும்படி உத்தரவிட்டுள்ளது.

அன்வார் போட்டியிடுவதற்காக காலி செய்யப்படும் தொகுதி பாண்டானாக இருக்கும் என்று தாங்கள் நம்புகிறோம், ஏனென்றால் அத்தொகுதியின் தற்போதைய எம்பியாக இருப்பவர் அன்வாரின் மனைவி டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில்.

அன்வார் பிரத்மர் ஆவதை உறுதி செய்வதற்கு பாண்டான் மிகப் பொருத்தமாக இருக்கும் என்று மலேசியாகினியிடம் இன்று கூறிய பாஸ் சிலாங்கூர் ஆணையர் சாலேஹென் முகியி, சொந்த மனைவி எம்பியாக இருக்கையில் மற்றவர்களின் இருக்கையை நீங்கள் கேட்கப் போவதில்லை என்றாரவர்.

அன்வாருக்காக பல இருக்கைகள் காலி செய்யப்படுவதற்காக தயார் என்றாலும், அநேகமாக அவர் போட்டியிடப் போவது பாண்டான் தொகுதிதான் என்று பாஸ் நம்புகிறது என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால், பாண்டான் தொகுதி மட்டுமல்லாமல் பெட்டாலிங் ஜெயா போன்ற இதர பல தொகுதிகளும் தயாராக இருக்க வேண்டும் என்று பாஸ் உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.