போலீஸ்: நஜிப் கணக்கில் ரிம2.97 பில்லியன் சேர்க்கப்படுள்ளது, 132 சட்டவிரோத நடவடிக்கைகள்

 

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் எஎம்இஸ்லாமிக் (AmIslamic) வங்கிக் கணக்கிற்கு மொத்தம் யுஎஸ்$972 மில்லியன் (ரிம2.973 பில்லியன்) மாற்றப்பட்டுள்ளதை போலீஸ் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்தத் தொகை மூன்று கட்டங்களில் – கூட் ஸ்டார் (Good Star), ஆபார் (Aabar) மற்றும் தானோர் (Tanore) வழையாக வந்துள்ளன என்று போலீஸ் படையின் துணைத் தலைவர் (DIGP)நூர் ரஸிட் இப்ராகிம் கூறினார்.

இக்கட்டம் வரையில், சட்டவிரோத முறையில் மேற்கொள்ளப்பட்ட 132 நடவடிக்கைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேற்கொண்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

64 பேர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் நஜிப் மற்றும் அவரது மகள் நூர்யானா நாஜ்வா ஆகியோரும் அடங்குவர். இன்னும் பலர் விசாரிக்கப்படுவர் என்றும் அவர் கூறினார்.

ரிம2.973 பில்லியன் என்பது அன்றைய நாணைய மாற்று மதிப்பின்படி செய்யப்பட்டது. ஆனால், யுஎஸ்$972 மில்லியனின் இன்றைய நாணய மாற்று மதிப்பின்படி ரிம3.985 பில்லியன் ஆகும்.