விஷத்தன்மை கொண்ட மதுபானம் அருந்தியதால் மாண்டோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது

இன்று நண்பகல்வரை மேலும் எழுவர்- கோலாலும்பூரில் அறுவர், பேராக்கில் ஒருவர்- விஷத்தன்மை கொண்ட மதுபானம் அருந்தியதால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்தது.

செப்டம்பர் 15இலிருந்து சிலாங்கூர், கோலாலும்பூர், பேராக் ஆகியவற்றில் 76பேர் விஷத்தன்மை கொண்ட மது அருந்தியதால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

“மொத்தம் 29 பேர் இறப்புகள் நிகழ்ந்துள்ளன. சிலாங்கூரில் 18 பேரும், கோலாலும்பூரில் ஒன்பது பேரும், பேராக்கில் இருவரும் மரணமடைந்தனர்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

இறந்தவர்கள் மியான்மார் (12), மலேசியா (9), நேப்பாளம் (6), வங்காள தேசம்(1) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஒருவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை.