நெடுஞ்சாலை கட்டும் செலவைக் காட்டிலும் டோல் வசூலிப்பு இரு மடங்கு அதிகம்- அமைச்சர்

நெடுஞ்சாலை பராமரிப்பாளர்கள் சாலைக் கட்டுவதற்குச் செலவான பணத்தைவிட இருமடங்கு அதிகமான தொகையைச் சாலைக்கட்டணமாக வசூலித்திருப்பதாக பொதுப் பணித்துறை அமைச்சர் பாரு பியான் கூறினார்.

இப்போது 29 நெடுஞ்சாலைகளில் சாலைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த 29 நெடுஞ்சாலைகள் கட்டுவதற்கு ஆன செலவு ரிம35.14 பில்லியன்.

அவை செயல்படத் தொடங்கி 2017வரை வசூலான சாலைக் கட்டணம் ரிம74.654 பில்லியன்”, என்று இன்று மக்களவையில் கூறினார்.

நெடுஞ்சாலை பராமரிப்புக்கு ஆண்டுக்கு ரிம2.5 பில்லியன் செலவாவதாக மதிப்பிடப்படுகிறது.

அமைச்சர் இன்று மக்களவையில் கேள்வி -நேரத்தின்போது இத்தகவல்களை வெளியிட்டார்.