பிகேஆர் கட்சித் தேர்தலில், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவிய ரஃபிசி ரம்லி, கட்சியின் உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை, பிகேஆர் தலைவர், அன்வார் இப்ராஹிம் இன்று ஓர் அறிக்கையின் வழி அறிவித்தார்.
இன்று, கட்சியின் மத்தியச் செயலவையினரை முடிவு செய்ய, பிகேஆர் மத்திய நிர்வாகக் குழு (எம்.பி.பி.) கூடியதாக அன்வார் சொன்னார்.
2018 – 2021-ம் ஆண்டுக்கான கட்சியின் உதவித் தலைவர்களாக ரஃபிசியோடு, சாங் லே காங் மற்றும் அலி பிஜ்ஜு (சபா / சரவாக்) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைமைச் செயலாளராக சைஃபுட்டின் நாசுடியோன் இஸ்மாயில், துணைச் செயலாளராக டாக்டர் ஆர் சந்தர குமார், பொருளாளராக லீ சியான் சுங், நிர்வாகச் செயலாளராக நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
சுங்கை சிப்புட் எம்பி எஸ் கேசவன் மத்திய செயலவை உறுப்பினராகவும் தகவல் பிரிவின் துணைத் தலைவராக எஸ் மணிவண்ணனும் உறுப்பினர்கள் குழுவின் தலைவராக தியான் சுவாவும் நியமிக்கப்பட்டனர்.