கேமரன் மலையில் இன்று ஐந்தாவது நாளாக இடைத் தேர்தலுக்கான பிரச்சார வேலைகள் மும்முரமாக நடக்கின்றன.
பக்கத்தான் ஹரப்பானின் எம்.மனோகரன், பிஎன்னின் ரம்லி முகம்மட் நோர், சுயேச்சை வேட்பாளர்கள் வொங் செங் ஈ, சாலேஹுடின் அப் தாலிப் ஆகியோர் தொகுதியில் தீவிரமாக பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளனர்
இன்று காலை மனோகரன் வாக்காளர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
“யார் உங்களுக்கு உதவ முடியும் என்று நினைக்கிறீர்களோ அவருக்கே வாக்களியுங்கள்”, என்றவர் வாக்காளர்களிடம் கூறினார்.
மனோகரனுடன் பகாங் அமனா மகளிர் பிரிவினரும் உடன் சென்று வேட்பாளரை வாக்காளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். அவர்கள் மலேசியாவில் மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், இன்னும் மற்ற இனத்தவர் வாழ்ந்தாலும் அவர்களிடையே இனப் பிரச்னை எதுவும் இல்லை என்பதை வாக்காளர்களிடம் எடுத்துரைத்தனர்.
கேமரன் மலையில் மலாய் வாக்காளர்கள்தான் அதிகம். 34 விழுக்காட்டினர். அங்கு ஓராங் அஸ்லிகள் 22 விழுக்காடு, சீனர்கள் 39 விழுக்காடு, இந்தியர்கள் 15 விழுக்காடு.