குவான் எங்: தாபோங் ஹரப்பான் நிதிக்கு ரிம202க்குமேல் திரண்டது

முந்தைய அரசாங்கம் பட்டிருந்த கடனைத் தீர்ப்பதற்காக பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் அமைத்த தாபோங் ஹரப்பான் மலேசியாவுக்கு இதுவரை ரிம202, 716,775.10 திரண்டிருப்பதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

ஜனவரி 2-இல் கூடிய அமைச்சரவை, அந்த நிதிக்கு மலேசியர்கள் அளித்த உற்சாகமான ஆதரவைக் கண்டு காப்பு நிதியின் முடிவு நாளை ஜனவரி 14வரை நீட்டிப்பதெனத் தீர்மானித்தது.

“அந்தத் தேதிக்குப் பிறகு செய்யப்படும் செய்யப்பட்ட நிதியளிப்புகள் நிதியில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டா. கொடுத்தவர்களுக்கே திருப்பிக் கொடுக்கப்படும்”, என லிம் கூறினார்.

தாபோங் ஹரப்பான் நிதியை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அமைச்சின் தலைமைச் செயலாளர் அஹ்மட் பட்ரி முகம்மட் ஸாஹிர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு முடிவு செய்யும் என அமைச்சர் தெரிவித்தார்.

“நிதிக்கு வாரி வழங்கிய எல்லா மலேசியருக்கும் அரசாங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது”, என்றாரவர்.