ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், இராசனக் கழிவுகள் கொட்டப்பட்டதால் மோசமான தூய்மைக்கேட்டுப் பிரச்னை உருவாகியுள்ள பாசிர் கூடாங்கில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்படாததைக் கண்டு அதிர்ச்சி தெரிவித்தார்.
“ஈராயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவசரகால நிலை பிரகடனம் தேவையில்லை. அதிசயமாக இருக்கிறது…..
“முதல் நாளே அவசரக்காலம் பிரகடனம் செய்யப்பட்டு குடியிருப்பாளர்களை வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று பாதுகாப்பான சூழல் திரும்பும்வரை அங்கேயே வைத்திருக்க வேண்டும்”, என்று பட்டத்திளவரசர் டிவிட் செய்திருந்தார்.