‘இரட்டை நாக்கு’ மசீச: கெப்போங் எம்பி சாடல்

டிஏபி எம்பி லிம் லிப் எங், பிஎன்னில் தொடர்ந்து இருக்கப்போவதாகக் கூறியுள்ள மசீசவை ‘இரட்டை நாக்கு’ கொண்ட கட்சி என்று சாடினார்.

மசீசவுக்கு பிஎன் கூட்டணியிலிருந்து வெளியேறும் நோக்கம் இருந்ததே இல்லை என்று அந்த கெப்போங் எம்பி கூறினார்.

மசீச மத்திய செயல்குழு, பிஎன்னின் பல இன ஒத்துழைப்பை நிலைநிறுத்த அக்கூட்டணியில் தொடர்ந்து இருப்பது என்று முடிவு செய்திருப்பதாக மசீச தலைவர் வீ கா சியோங் அறிவித்ததற்கு எதிர்வினை ஆற்றியபோது லிம் அவ்வாறு கூறினார்.

மசீசவின் அறிவிப்பு ஆச்சரியமளிக்கவில்லை என்றாரவர்.

“(பிஎன்னிலிருந்து வெளியேறும்) தீர்மானம் முன்மொழியப்பட்டபோதே அதன் முடிவு எப்படி இருக்கும் என்பதை வீயும் மற்ற மசீச தலைவர்களும் அறிவார்கள்.. வெளியேறும் நோக்கம் என்றும் அவர்களுக்கு இருந்ததில்லை. மக்களை ஏமாற்றத்தான் அப்படிச் செய்தார்கள்”, என்றாரவர்.

இதற்குமுன் மசீசவும் மஇகாவும் பிஎன்னிலிருந்து வெளியேறி வேறொரு கூட்டணி அமைக்கப்போவதாகக் கூற்யிருந்தன.