பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் டிஏபி வேட்பாளர் விவியன் வோங்கிற்கு சண்டாகான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் வெற்றியடைந்ததை முன்னிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
இருப்பினும், சண்டாகான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதால் நிறைவு கொள்ள வேண்டாம் என பக்காதான் ஹராபான் கூட்டணிக்கு அன்வார் ஆலோசனை கூறினார்.
பக்காத்தான் ஹராபான் கூட்டணிக்கு மக்கள் ஆதரவளிப்பதாகவும் இந்த வெற்றி தெளிவாகக் காட்டுகிறது என்றார்.
மேலும் பக்காத்தான் ஹராபான் ஆட்சியின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் ஆற்றிய உரையில் அவர் முன்வைத்த நாட்டு முன்னேற்றத்துக்கான ஏழு மூலோபாய திட்டத்திற்கு அணைத்து தரப்பினரின் ஒத்துழைப்பினை கேட்டுக் கொண்ட அன்வார் இப்ராஹிம், பிரதமர் மஹாதிர் முகமதுவின் கரங்களை வழுப்படுத்த அணைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார்.
“இருப்பினும் பக்காத்தான் ஹராபான்; தலைமை இந்த வெற்றியோடு நிறைவு கொண்டு விடாமல் மக்களின் பொருளாதார நிலைமைகள் ஒவ்வொரு மட்டத்திலும் தொடர்ந்து பராமரிக்கப்படுவதை உறுதிப்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும்,” என்று அன்வார் இப்ராஹிம் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
11,521 வாக்குகள் பெரும்பான்மையுடன் பி.பி.எஸ் வேட்பாளர் லிண்டா சென் மற்றும் மூன்று வேறு வேட்பாளர்களை தோற்கடித்து டிஏபி வேட்பாளர் விவியன் வோங்; வெற்றியை தக்க வைத்துக் கொண்டார்.
பி.பி.எஸ் வேட்பாளர் லிண்டா சென் 4,491 வாக்குகளைப் பெற்றார்.