பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு ஹரி ராயா போனஸ்

பினாங்கு அரசு அதன் ஊழியர்கள் நோன்புப் பெருநாள் சிறப்புப் போனஸாக அரைமாதச் சம்பளம் அல்லது குறைந்தபட்சம் ரிம1,000 பெறுவார்கள் என இன்று அறிவித்தது.

விழா காலத்தையும் விலைவாசி உயர்ந்து கொண்டே இருப்பதையும் கருத்தில்கோண்டு இந்தச் சிறப்புப் போனஸ் வழங்கப்படுவதாக முதலமைச்சர் செள கொன் இயோ கூறினார்.

சிறப்புப் போனஸுக்காக ரிம 5.27 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 3,905 அரசு ஊழியர்கள் அதனால் பயனடைவார்கள் என்றாரவர்.