வழிபாட்டுத் தளங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களைத் தாக்கும் திட்டத்துடன் ISIS தொடர்புடைய நால்வர் கைது

முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தளங்கள் மற்றும் கோலாலம்பூரைச் சுற்றியுள்ள பொழுதுபோக்கு மையங்களைத் தாக்கும் திட்டத்துடன் ஐ.எஸ் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய நான்கு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

போலிஸின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப்துல் ஹமீத் பாடோர் தெரிவிக்கையில் நான்கு நபர்களும் இஸ்லாத்தை தற்காக்கத் தவறியதாக மற்றும் அவமதித்ததாகக் கருதப்பட்ட “உயர்மட்ட” நபர்களைக் கொல்ல திட்டமிட்டதாகக் கூறினார்.

அப்துல் ஹமீத் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்கள் 20இல் இருந்து 49 வயதுடையவர்கள். இவர்களில் மலேசியர்; குழுவின் தலைவராகவும், இந்தோனேசியர் ஒருவர், மற்றும் இரண்டு ரோஹிங்கியா இனத்தவர்களும் அடங்குவர்.

இந்த மாத ஆரம்பத்தில் புக்கிட் அமான் தீவிரவாத தடுப்பு சிறப்புப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் திரெங்கானு ஆகிய இடங்களில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.