நிலம் மாற்றிவிடப்பட்டதில் ஊழல் : தற்காப்பு அமைச்சு எம்ஏசிசி-இடம் புகார்

தற்காப்பு அமைச்சு அதன் நிலங்கள் மாற்றிவிடப்பட்டதில் ஊழல்கள் நிகழ்திருப்பதாக மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம் ஏசிசி)த்திடம் இரண்டு புகார்களைச் செய்துள்ளது.

16 இடங்களில் நிலம் மாற்றிவிடப்பட்டதில் ஊழல் நிகழ்ந்திருப்பது அம்பலப்படுத்தப்பட்டிருப்பதால் அவ்விவகாரம் தொடர்பில் விரிவாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அது ஓர் அறிக்கையில் வலியுறுத்தியது.

தற்காப்பு அமைச்சர் முகம்மட் சாபு கடந்த வியாழக்கிழமை டேவான் நெகாராவில் தாக்கல் செய்த பொருள் கொள்முதல், நிர்வாகமுறை, நிதி மீதான குழுவின் விசாரணை அறிக்கையில் அந்த நிலமாற்றங்கள் பற்றிய விவரங்கள் பட்டியலிடப்பட்டிருந்தன.

16 நில மாற்றங்கள்மீதான அந்த விசாரணை அறிக்கை, இவ்வாரம் தொடங்கி கட்டம் கட்டமாக அமைச்சின் வலைப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் அவ்வறிக்கை கூறிற்று.