ஊழல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக் அவர்களுக்கு ஆதரவாக நடக்கும் பேரணியில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கலந்து கொள்வார்கள் என்று நமது அரசியல் கட்சியின் தலைவர் சரவணன் அவர்கள் செய்தி வெளியிட்டு உள்ளார்.
நஜிப், நமது முன்னால் பிரதமர், இந்தியர்களுக்காக சிறப்பான திட்டங்களை உண்டாக்கியவர் அவர். ஆனால், அவரின் பால் உள்ள அவநம்பிக்கை அவர் செய்த ஊழலால் உருவானதாகும்.
நஜிப் அந்த ஊழலின் வழி கிடைத்த பணத்தை கொண்டு மக்களுக்கு நன்மை செய்தார் என்பதால் அவர் ஒரு சிறந்த தலைவராக முடியுமா என்று கேள்வி எழுகிறது.
அப்படியானால் ஒருவர் நாட்டின் வளத்தை கொள்ளையடித்து அதன் வழி மக்களுக்கு சிறிது உதவி செய்தால் அந்த கொள்ளை அடிப்பவரை நாம் நல்லவர் என்று அடையாளம் காண்பதாக கருத வேண்டுமா? இது சரியா இதுதான் ஏற்புடைய ஒரு நடைமுறையா? என்று நாம் சிந்திக்க வேண்டும்.
கொள்ளையடிப்பதும் பணத்தை திருடுவதும் ஊழலில் ஈடுபடுவதும் குற்றங்கள்.
இந்தக் குற்றங்களை புரிந்தவர்களுக்கு மக்கள் ஆதரவாக இருக்க அதன் பின்னணியில் இதுபோன்று திருட்டு குற்றங்களை செய்பவர்கள் அதன்வழி கிடைக்கும் பணத்தை மக்களுக்கு பகிர்ந்து கொடுப்பதின் வழி தான் நல்லவர்கள் என்றும் தான் தாராளமான மனது படைத்தவர்கள் என்றும் பறைசாற்றிக் கொள்கிறார்கள்.
இது ஒரு தவறான கருத்தாகும் எந்த வகையிலும் கொள்ளையடிக்கும் ஒரு நபர் நாட்டின் தலைவராக இருக்கக் கூடாது. இருக்க முடியாது.
அடிப்படை மக்களுக்கான உரிமைகோரலில் அவர்களுக்காக சேவையாற்றுவார்கள் மட்டுமே மக்களின் தலைவர்களாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் கொள்ளை அடித்த நபருக்கு ஆதரவாக நமது அரசியல்வாதிகள் முன் நின்று ஆதரவு தெரிவிப்பது ஒரு அவமானத்திற்குரிய செயலாகும்.