வீழ்ந்த அம்னோ, எழுமா? – டோமி தோமஸ்

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேல் இரும்புப் பிடியாக நாட்டை ஆண்டு வந்த மலாய்க்காரர்களின் தாய்க் கட்சியாகக் கருதப்படும் அம்னோ தற்போது 3 பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றது எனப் பரவலாகப் பேசப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியை நழுவவிட்ட அக்கட்சி சில அரசியல் தவளைகளின்…

ஹெபடைடிஸ்-சி கண்டுபிடித்தவர்களுக்கு  2020 மருத்துவத்திற்கான நோபல் பரிசு – கவிதா…

ஹெபடைடிஸ்- சி வைரஸை (Hepatitis C virus) கண்டுபிடித்த மூன்று விஞ்ஞானிகள் 2020 ஆம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியல் நோபல் பரிசை (Nobel Prize in Medicine or Physiology) வென்றுள்ளனர். இவர்கள்   பிரிட்டிஷ் விஞ்ஞானி மைக்கேல் ஹக்டன் (Michael Houghton). மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஹார்வி ஆல்டர்…

தமிழ் மொழி செய்த பாவம்தான் என்ன? – இராகவன் கருப்பையா

எனக்கு ஆங்கிலம் பேச வராது என எந்த அமெரிக்கரோ பிரிட்டன்வாசியோ சொல்லியிருக்க மாட்டார். எனக்குச் சீன மொழியில் பேசத் தெரியாது என எந்தச் சீனரும் சொல்லியதாகத் தெரியாது. எனக்குக் கொஞ்சம் கொஞ்சம்தான் மலாய் தெரியும் என எந்த ஒரு மலாய்க்காரரும் சொல்லியதாக நாம் கேள்விப்பட்டதில்லை. ஆனால் நம் இனத்தவர்…

உணவு, உடல்நலம்: மன நலத்துடன் இருக்க என்ன உணவுகளை உண்ண…

உங்கள் மனநலம் என்பது, நீங்கள் உண்ணும் உணவுகளைப் பொறுத்தது. இதைப் பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மனநலம் என்பது எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் சம்பந்தப்பட்டது என்று அவர்கள் சொல்லலாம். அப்படியானால் உணவுக்கும் அதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்ற கேள்வி எழலாம். எப்படி உணவு நம்முடைய மனநலத்தை பாதிக்கும்?…

கோலஸ்ட்ரோல் புற்றுநோயை அதிகப்படுத்தும்

கவிதா கருணாநிதி - இவ்வருடத்தில் அமெரிக்காவின் டியுக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எலிகளைக் கொண்டு நடத்திய ஆராய்ச்சியின் மூலம் நம் உடலில் புற்றுநோய் மேலும் பரவக் கொலஸ்ட்ராலின் பங்களிக்கிறது என்று  கண்டுபிடித்துள்ளனர். புற்றுநோய் என்பது இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடின்றி உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகும். கொலஸ்ட்ரால் என்பது நம் உடலில் இருக்கும் கல்லீரல்…

ஏனோ தானோ அமைச்சரவையில் – ஹிரோவாகும் கைரி!

இராகவன் கருப்பையா - தனது புதிய அரசாங்கத்திற்கு அமைச்சர்களை நியமனம் செய்ததில் பிரதமர் இஸ்மையில் செய்த உருப்படியான ஒரே காரியம் கைரி ஜமாலுடினை சுகாதார அமைச்சராக நியமித்ததுதான். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாட்டைச் சீர்குலைத்த அதே அமைச்சர்களை மீண்டும் உள்ளே கொண்டு வந்ததால் பல்வேறு தரப்பினரின் கண்டனத்திற்குள்ளான பிரதமரை…

புற்றுநோய் கண்டுபிடிப்பில் சாதனை- மலேசிய விஞ்ஞானி டாக்டர் சிரேனா நிக்…

யூகெவில் இருக்கும் மலேசியா விஞ்ஞானி டாக்டர் சிரேனா நிக் சைனால் புற்றுநோயையை விளைவிக்கும் மரபணு காரணங்களைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு மருந்து அறிவியல் வளர்ச்சிக்குப் பங்களித்ததால் அவர்களுக்குப் பிரான்சிஸ் கிரி மெடல் மற்றும் லெக்சர் 2022 (Francis Crick Medal and Lecture 2022) விருது வழங்கப்பட்டது. கீச்சகத்தில்(Twitter)…

தலிபானை வாழ்த்தியது அரசியல் முதிர்ச்சியின்மை! – இராகவன் கருப்பையா

கடந்த 20 ஆண்டுகளாக ஆஃப்கானிஸ்தான் மக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கு அரணாக இருந்த அமெரிக்கா தனது கூட்டுப் படைகளுடன் அந்தாட்டை விட்டு வெளியேறியது ஒரு சோகமான நிகழ்வு. அமெரிக்கத் துருப்புகள் வெளியான மறு கணமே தலிபான் தீவிரவாதிகள் நாட்டைக் கைப்பற்றியதால்  சுதந்திரமாக, உல்லாசமான வாழ்க்கையை அனுபவித்து வந்த அந்நாட்டு மக்களின்…

நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்கும் படலம் உடனடியாக  நிறுத்தப்பட வேண்டும்! –  குலசேகரன்

"நானும் என்னுடைய  அரசியல் செயலாளர் ஜெரமி சுவாவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால்  நான் கொடுத்த புகாரின் பேரில்   விசாரண நடத்தப்பட வேண்டி அழைக்கப்பட்டிருந்தோம்.  ஜெரமியுடன் ஊழல் தடுப்பு ஆணையம்  4 மணி நேரம் விசாரணை நடத்தியது. அவருடைய  கைத்தொலைபேசியும்  ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.நான் ஒரு மணி நேர  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன் . அப்பொழுது  இந்த  புகாரவை  தீவிரமாக  விசாரிக்க வேண்டுமென  அந்த ஆணையத்தைக் கேட்டுக் கொண்டேன். பணம்…

கொரோனா சவாலுக்கிடையே ஜப்பானின் ஒலிம்பிக்கும் ஒரு  சாதனையாகும்

இராகவன் கருப்பையா -சுயக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் கோறனி நச்சிலைக் கூடத் தூர நிறுத்தலாம் என நிரூபித்துள்ளார்கள் ஜப்பானியர்கள். 'மனமிருந்தால் மார்க்கம் உண்டு' என்பதற்கு ஏற்ப 'கோவிட்-19' எனும் கொடிய அரக்கனை இரண்டரை வாரங்களுக்குக் காலுக்கடியில் அடக்கி 32ஆவது ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக அரங்கேற்றி முடித்த அவர்களுடைய ஆற்றலை…

கோவிட்டின் கொடூரமும் அசையாத அரசியல் தலைவர்களும்

இராகவன் கருப்பையா- இரவு நேரத்தில் தொலைபேசி அழைப்பு வந்தாலே ஒருவித அச்சம் ஆட்கொள்கிறது. காலையில் புவனத்தைப் பார்க்கவே சிலருக்கு பயமாக இருக்கிறது - கைகள் நடுங்குகின்றன. மலேசியாவில் வெகுசன மக்களின் அன்றாட நிலைப்பாடு தற்போது இப்படித்தான் உள்ளது. கோறனி நச்சிலின் கொடூரம் மிக அதிகமான மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் சூழலில்…

கொரோனாவால் குழந்தைகளுக்கு நீண்ட கால பாதிப்பு ஏற்படுமா? -லண்டன் ஆய்வு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒரு வார காலத்தில் குணமடைந்துவிடுவார்கள் என்றும், அரிதாகவே அவர்களுக்கு நீண்டகால அறிகுறிகள் இருக்கும் எனவும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. லண்டனின் கிங்ஸ் கல்லூரி விஞ்ஞானிகள், குறைவான எண்ணிக்கையிலானவர்களுக்கு நீண்டகால உடல்நல பாதிப்பு இருந்தாலும் அந்த எண்ணிக்கை மிகக் குறைவே என்கின்றனர். தலைவலி மற்றும்…

மௌனராகத்திலும், களைக்கட்டிய ஒலிம்பிக் போட்டிகள்

இராகவன் கருப்பையா - 32ஆவது ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெறும்  எனக் கடந்த 2013ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட போது ஜப்பான் முழுவதும் விழாக் கோலம் பூண்டது. ஆனால் அந்தப் போட்டிகள் அவற்றுக்கே உரியக் கோலாகலமும் ஆரவாரமும் இல்லாத ஒன்றாக நடைபெறும் என மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திருந்த ஜப்பானியர்கள் மட்டுமின்றி உலக மக்கள் யாருமே அந்த சமயத்தில்…

உரிமை கோரப்படாத உடல்கள் – கிள்ளான் வட்டாரப சவக்கிடங்கில் சடலங்கள்…

உரிமை கோரப்படாத உடல்கள் மற்றும் தாமதமாக அகற்றும் செயல்முறைகளால் கிளாங் வட்டாரத்தில்  உள்ள பல மருத்துவமனைகளின்  சவக்கிடங்குகளில் பிரேதங்களின் எண்ணிக்கை அதிகமாக்கியுள்ளது. சுகாதார அதிகாரிகள், தினசரி கோவிட் -19 தொற்றால் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அடக்கம் அல்லது தகனம் செய்யும் செயல்முறையை துரிதப்படுத்த  வேண்டும் என்கிறார்கள்.…

நம் இந்திய மக்கள் எதிர் நோக்கி கொண்டிருக்கும் அவலங்களுக்கு தீர்வு…

கோவிட்-19 நாட்டை உழுகிக்கிக் கொண்டிருக்கும் வேளையில் நாட்டு மக்கள் அதுவும் குறிப்பாக நம் இந்திய மக்கள் எதிர் நோக்கி கொண்டிருக்கும் அவலங்கள் எண்ணில் அடங்காதவையாக உள்ளது. பொதுவாகவே வருமானம் இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகப்படியாக செய்யக் கூடியது உணவு பொட்டலங்கள் வழங்குவதாகவே உள்ளது. இன்னும் எத்தனை நாட்களுக்கு உணவு…

வெள்ளை கொடியால் மிரளும் பச்சைக் கொடி பாஸ் கட்சி

இராகவன் கருப்பையா- இரண்டொரு வாரங்களுக்கு முன் முடுக்கி விடப்பட்ட வெள்ளைக்கொடி இயக்கம் தற்போது நாடு முழுமைக்கும் பரவி வறுமையில் வாடும் பி40 தரப்பினருக்கு ஒரு பயனாக அமைந்து வருகிறது. நிக் ஃபைஸா எனும் ஒரு தொழில் முனைவர் தனது முகநூலில் முதன் முறையாக இந்த யோசனையை பதிவு செய்தார். அவ்வியக்கம்…

சிரமப்படுவோருக்கு உதவுவதில் இந்து ஆலயங்களின் பங்கென்ன?

இராகவன் கருப்பையா- கோறனி நச்சிலின் அன்றாடத் தொற்று நம் நாட்டில் தற்போது 10,000ஐ நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் வறிய மக்களின் பரிதவிப்பு மேலும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. 'கித்தா ஜாகா கித்தா' (ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வோம்) எனும் அடிப்படையில் நாடு தழுவிய நிலையில் பசி பட்டினியால் அவதிப்படுவோருக்கு அரசு சாரா இயக்கங்களும்…

உதவி நிதி நாடுவோருக்கு பாலியல் தொல்லையா!

இராகவன் கருப்பையா- பத்திரிகைகள் வாயிலாகவோ புலனத்தின் வழியிலோ அல்லது நேரடியாகவோ உதவி நாடுவோரில் ஒரு சிலர் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல் இப்போது அம்பலமாகியுள்ளது. மற்ற வேளைகளில் இது போன்றக் கேவலமான சம்பவங்கள் ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்ந்துள்ள போதிலும் தற்போதைய நோய்த் தொற்றுக் காலத்தை சில கயவர்கள் தங்களுக்கு…

கருப்புக்கோடியோ! வெள்ளைக் கொடியோ அதுவும் ஜனநாயகமே – குலா!

சர்ச்சைக்குரிய வாசகங்கள் இருப்பதாகக்  கூறி  கறுப்புக் கொடி  பிரச்சாரத்திற்கு    எதிராக  காவல்துறை நடவடிக்கை எடுக்கவிருப்பது  வருத்தத்தை அளிக்கிறது. பெண்டெரா ஹித்தாம் (#benderahitam) என்பது சமூக ஊடகங்களில்   பரவிவரும்  ஒரு  பிரச்சார   இயக்கமாகும்.  மக்கள்  இதை  ஒரு  தளமாகப் பயன்படுத்தி   இந்த  கோவிட் 19 ஐ அரசாங்கம்  கையாளும் விதத்தில்  உள்ள அதிருப்தியைத்  தெரிவித்து வருகிறார்கள். இந்த சமூக வலைத்தள  பிரச்சாரத்தில் #பெண்டெரஹித்தாம் , # லவான் ஆகிய இரண்டும்  அதிகமாக மக்களால் பகிரப்படும் தளங்களாக  விளங்குகின்றன. மலேசிய  வரலாற்றில்  என்றுமே இல்லாத வகையில்  ஏறக்குறைய 250,000 பகிர்வுகள் நடந்துள்ளன மக்கள் முன்வைப்பதெல்லாம் 3  கோரிக்கைகள்  மட்டுமே நடப்பு பிரதமர் பதவி  விலக…

மக்களின் மனம் கவர்ந்த மருத்துவர் சந்திரா

இராகவன் கருப்பையா- பஹாங் மாநிலத்தின் பிரதான நகரங்களில் ஒன்றான பெந்தோங்கில் டத்தோ  டாக்டர் சந்திரசேகரனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. பெந்தோங் மாவட்ட மருத்துவமனைக்கு இயக்குனாரப் பணியாற்றிய காலத்தில் ஒரு மருத்துவராக மட்டுமின்றி அங்குள்ள மக்களுக்குத் தேவையான சகல உதவிகளுக்கும் கூப்பிட்ட குரலுக்கு மறுகணமே களமிறங்கும் ஒரு சமூக சேவையாளராகவும்  கோலோச்சியவர்தான்…

தமிழ்ப்பள்ளிகளை உயர்த்த தலைமையாசிரியர்கள் முன்வர வேண்டும்!

இராகவன் கருப்பையா - தமிழ்ப்பள்ளிகளை காப்போம், தமிழ்ப்பள்ளி நம் அனைவரின் தேர்வாகவேண்டும், தமிழ்ப்பள்ளிகளே தமிழரை அடையாளம் காட்டும், தமிழ்ப் பள்ளிகள் தமிழர்களின் தன்மான ஆலயங்கள், தமிழ்ப் பள்ளி தமிழர் பண்பாட்டின் மேன்மைமிகு பேரொளி, தமிழ்ப்பள்ளியின் மாண்பைக் காப்போம், தாய் மொழி எங்கள் மொழி - தமிழ்ப் பள்ளி எங்கள் வழி,…

‘மேதகு’ வெறும் திரைபடம் அல்ல, தமிழினம் அறிந்துகொள்ள வேண்டிய வரலாற்றுப்…

இரண்டு நாட்களுக்கு முன், உலகம் முழுவதும் BS Value OTT தளத்தில் வெளியீடு கண்ட "மேதகு" வெறும் திரைப்படம் மட்டுமல்ல, அது உலகத் தமிழினம் அறிந்துகொள்ள வேண்டிய வரலாற்றுப் பாடம் என உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகமும் மலேசியத் தமிழ்ச்சமய பேரவையும் தெரிவித்தன. சிறந்ததொரு வரலாற்று படைப்பைத் தயாரித்து…

பணப் புழக்கத்தினால் நோய் தொற்றுமா?

இராகவன் கருப்பையா - கோறனி நச்சிலின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் 4 கட்ட மீட்புத் திட்டத்தை பிரதமர் மஹியாடின் அறிவித்துள்ள போதிலும் 'ஹெர்ட் இம்யூணிட்டி' எனப்படும் கூட்டெதிர்ப்பு சக்தியை அடையும் காலம் எப்போது வரும் என்று உறுதியாகக் கூற முடியாது. ஏனெனில் கடந்த சில வாரங்களாக…