மற்ற சமயங்கள் பற்றிச் சொல்லிக் கொடுப்பதைப் பல்கலைக்கழகங்களில் தொடங்குவதே நல்லது- நிக் ஒமார்

யயாசான் டாக்வா இஸ்லாமியா (யாடின்) தலைவர் நிக் ஒமார் நிக் அப்துல் அசீஸ், இஸ்லாம் தவிர்த்து மற்ற சமயங்களின் கல்வியைப் பல்கலைக்கழகங்களில் தொடங்குவதே நல்லது என்கிறார்.

மலேசிய இளைஞர் மன்றம் (எம்பிஎம்) பள்ளிகளில் சமயக் கல்வியை அறிமுகப்படுத்தலாம் அது மாணவர்கள் இஸ்லாத்துடன் மற்ற சமயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும் என்று பரிந்துரைத்திருப்பது குறித்துக் கருத்துரைத்தபோது நிக் ஒமார் அவ்வாறு கூறினார்.

“அப்பரிந்துரை இடைநிலைப் பள்ளிகள் அல்லது உயர்க் கல்விக் கழகங்களுக்குப் பொருத்தமாக இருக்கலாம் ஆனால், தொடக்கநிலைப் பள்ளிகளுக்குப் பொருத்தமற்றது”, என்றாரவர்