பெர்லிஸ் முப்தியின் காருக்குத் தீவைத்த சம்பவத்தில் தொடர்புள்ள முக்கிய நபர் கைது

கடந்த மார்ச் மாதம் பெர்லிஸ் முப்தி முகம்மட் அஸ்ரி சைனுல் அபிடினின் காருக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புள்ள முக்கியமானவர் என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபரை பெர்லிஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.

சைனி என்ற பெயரில் அறியப்படும் அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என பெர்லிஸ் போலீஸ் தலைவர் நூர் முஷார் முகம்மட் கூறினார்.

போலீஸ் மை தோமி என்பாரையும் தேடி வருவதாக அவர் சொன்னார்.

“இதுவரை சந்தேகத்தின்பேரில் ஐவரைப் பிடித்து வைத்துள்ளோம்.

“இன்னமும் மை தோமியைத் தேடி வருகிறோம். விரைவில் சிக்குவார் என்று நம்புகிறேன்”, என்றவர் தெரிவித்ததாக பெரித்தா ஹரியான் கூறியது.