ரோஸ்மா அவரது சொத்து விவரத்தை அறிவிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளபடி அவருடைய சொத்து விவரத்தை அறிவித்தாக வேண்டும்.

அதிகாரிகளின் அறிவிக்கையைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ரோஸ்மா செய்துகொண்ட மனுவை நிராகரித்த கோலாலும்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி முகம்மட் ஜைனி மஸ்லான், சொத்து விவரத்தை அறிவிப்பது ரோஸ்மாமீதான நடப்பு வழக்கு விசாரணையைப் பாதிக்காது என்றார். ரோஸ்மாமீது 17 பணச் சலவைக் குற்றச்சாடுகள் சுமத்தப்பட்டு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.