மெட்ரிகுலேஷன் பிரச்சனை : டிஏபி இளைஞர் பிரிவின் 5 பரிந்துரைகள்

கருத்து | நம் மக்களிடையே, எளிதில் தீர்வு காண வேண்டிய பல விஷயங்கள், இன, மதப் பிரச்சனைகளின் குறுக்கீடுகளினால், பூதாகரமாக ஆக்கப்படுகிறது. இதனால், பிரச்சனைகள் சுமூகமாகத் தீர்க்கப்படாமல், இனரீதியாக சிக்கிக்கொண்டு, அனைத்து தரப்பினரும் இழப்புகளை எதிர்நோக்குகிறோம்.

சில நாட்களுக்கு முன்னர், கல்வியமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், மெட்ரிகுலேஷனில் இன ஒதுக்கீடு பிரச்சனையும், சில தனியார் நிருவனங்களில், மெண்டரின் பேசத் தெரிந்தவர்களை வேலைக்கு எடுக்கும் பிரச்சனையையும் ஒப்பிட்டுப் பேசியது, அவரின் தனிப்பட்ட நிலைப்பாடு என நான் நினைக்கிறேன்.

அது அமைச்சரவையிம் நிலைப்பாடு அல்ல. அது மத்திய அரசின் கண்ணோட்டம் அல்ல.

உண்மையில், சில இனவாத குழுக்கள், தங்கள் ஆயுதமாக பயன்படுத்தும் இனவாத சொல்லாடல்களுக்கு டாக்டர் மஸ்லி அடிபணியக்கூடாது, அவர் படித்தவர், சிறந்தவர், ஒரு கல்விமான்.

அந்தக் குழுக்களால் இனவெறி ஆயுதமாக மாறியிருக்கும் தனது அறிக்கையை, டாக்டர் மஸ்லி திரும்பப் பெற வேண்டும். பக்காத்தான் ஹராப்பானின் இன நல்லிணக்கக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டு, பெரும்பான்மை பி40 குழுவினருக்கு உதவுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

டாக்டர் மஸ்லி மாலேக் அவர்களுக்கு, டிஏபி இளைஞர் பிரிவு முன்வைக்கும் 5 பரிந்துரைகள் :-

1. எஸ்.டி.பி.எம். மற்றும் மெட்ரிகுலேஷன் மாணவர்களுக்குச் சமமான வாய்ப்பை ஏற்படுத்த, மெட்ரிகுலேஷன் பரீட்சையில் இருக்கும் ‘வடிகட்டுதல்’ முறையைக் (sistem penapisan) கல்வி அமைச்சு தீர்க்க வேண்டும்.

2. புறப்பாடத்திட்ட மதிப்பீட்டு முறையை மறுஆய்வு செய்தல். மெட்ரிக்குலேஷன் கீழான புறப்பாட நடவடிக்கை மதிப்பீட்டு முறை, எஸ்.டி.பி.எம். மதிப்பீட்டு முறையிலேயே இருக்க வேண்டும்.

3. மெட்ரிக்குலேஷன் திட்டத்தின் வழி, பொது உயர்க்கல்வி கூடங்களில் இருக்கும் 15,000 இடங்கள் உறிஞ்சப்படுகின்றன என்பதனைக் கவனிக்க வேண்டும். செலவு தாக்கங்கள், கல்வியாளர்கள் பிரச்சினை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் என எந்தப் பிரச்சனையும் இதில் இல்லை.

4. எஸ்.டி.பி.எம். மாணவர்களுக்கு சி.ஜி.பி.ஏ. (CGPA) புள்ளிகளைச் சுயமாகப் பதிவு செய்யுங்கள். அல்லது, சிறந்த புள்ளிகள் பெற்ற 2,000 மாணவர்களுக்கு, இன அடிப்படையில் அல்லாமல், கூடுதல் நுழைவு வாய்ப்புகளை வழங்கலாம்.

5. தேர்வுகளை இணைக்க, எஸ்.டி.பி.எம். மற்றும் மெட்ரிகுலேஷன் இடையே ஒரு பாடத்திட்டம் மற்றும் தரமதிப்பீடு, 2020-ல் உருவாக்கப்பட வேண்டும்.

டாக்டர் மஸ்லியிடம் வழங்கப்பட்ட இந்த 5 பரிந்துரைகளும் அதற்கான விளக்கங்களும், டிஏபி இளைஞர் பிரிவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு ஆகும்.

எம்40 மற்றும் தி20 குழு மக்களைவிட, பி40 குழுவினருக்கு, பொது உயர்க்கல்வி கூடங்களில் நுழைய முன்னுரிமை வழங்க வேண்டும்.

பி40 குழு என்று வரும்போது, அது இனப்பாகுபாட்டைக் கடந்து, மலாய்க்காரர்கள் மட்டுமின்றி, தேவையின் அடிப்படையில் நாட்டில் உள்ள அனைத்து இனங்களுக்கும் உதவி சென்று சேறும்.

இது சம்பந்தமாக, தேசிய ஹராப்பான் இளைஞர் பிரிவு மட்டத்தில், உயர்க்கல்வி விவகாரங்களுக்கான ஆலோசனைக் குழு ஒன்று நிறுவ வேண்டுமென நான் முன்மொழிகிறேன்.

ஹோவர்ட் லீ – டிஏபி இளைஞர் பிரிவு தலைவர், பாசிர் பிஞ்சி சட்டமன்ற உறுப்பினர்