பிரதமர் மகாதிர் முகமத்; வணிக ரீதியில் பூமிபுத்ரா சலுகைகள் அளிக்கப்படும் என உறுதிப்படுத்தினார், டெண்டர் முறையிலும் இச்சலுகைகள் தொடர்ந்து ‘புதிய மலேசியாவில்’ நிலை நிறுத்தப்படும் என்று கூறினார் .
பூமிபுத்ரா ஒப்பந்ததாரர்களின் கோரிக்கையைப் பற்றி கருத்து தெரிவிக்க கேட்டதற்கு, கிழக்கு கடற்கரை தொடர்வண்டி (ECRL) திட்டத்தின் 20 விழுக்காடு ஒதுக்கீட்டை பூமிபுத்ரா ஒப்பந்ததாரர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியதா என டாக்டர் மகாதிரிடம் கேட்கப்பட்டதற்கு, “இல்லை, நாங்கள் ஒதுக்கீடு செய்யவில்லை, ஆனால் அவர்கள் (பூமிபுத்ரா ஒப்பந்ததாரர்கள்) 20 விழுக்காடு கேட்கிறார்கள்”.
“பழைய அமைப்பு முறைபடியே பூமிபுத்ராக்களின் வணிக ரீதியில் பூமிபுத்ரா சலுகைகள் பராமரிக்கப்பட வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்தார் , டெண்டர் முறையிலும் இச்சலுகைகள் அளிக்கப்படும் என்பதனை நான் தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
பெட்டாலிங் ஜெயாவில் பெர்சாத்து கட்சி உயர்நிலைக் கூட்டத்திற்கு அக்கட்சி தலைமையகத்தில் தலைமை தாங்கிய பின் இன்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.