தேசிய கடனை குறைக்க மூன்று ஆண்டு கால அவகாசம் தேவைப்படுகிறது: மகாதிர்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 54 விழுக்காடு உச்சவரம்பிற்கு தேசிய கடனை குறைக்க மூன்று ஆண்டு கால அவகாசம் அரசாங்கத்திற்கு தேவைப்படுகிறது எனவும் இது தற்போது 80 விழுக்காடாக உள்ளது என டாக்டர் மகாதிர் முகமட் கூறினார்.

பல்வேறு சவால்களை சந்தித்த போதிலும், அரசாங்கம் 1 டிரில்லியனுக்கும் மேலாக இருந்த தேசியக் கடனை தற்போதைய அளவுக்கு குறைத்துள்ளது.

“முந்தைய அரசாங்கம் செய்த பல மரபு மீறிய செயல்களால், நாம் கடுமையான மற்றும் கடினமான பணியை மேற்கொள்கிறோம்… உதாரணமாக, அவர்கள் அரசாங்கத்தின் உச்சவரம்புக்கு அப்பால் அதிக பணத்தை கடன் வாங்கியுள்ளார்கள்.

“நாங்கள் இந்த கடனை செலுத்துவதோடு ஒரு நியாயமான அளவிற்கு அதை குறைக்க வேண்டும், இதற்கு மூன்று ஆண்டு கால அவகாசம் அரசாங்கத்திற்கு தேவைப்படுகிறது, அனாலும் நாட்டை நிர்வகிப்பதில் நாம் பெறும் அனைத்து வருவாயையும் அது விழுங்காது” என்று அவர் கூறினார்.

டோக்கியோவில் ஜப்பானிய வெளியுறவுக் கூட்டுக் கிளப்பில் ஒரு கூட்டத்தில் அவர் பேசினார்.

பிரதமர் மகாதிர் தற்பொழுது ஜப்பானுக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயனம் மேற்கொண்டுள்ளார்.

TAGS: